Optical illusion: ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு காட்சிப்பிழை, ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு கண்கட்டி வித்தை, என்ன பில்டப் ஓவரா இருக்குதே என்று பார்க்கிறீர்களா? இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று விளையாடிப் பாருங்கள் எல்லாமே அனுபவமாகும்.

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீங்கள் பார்க்கும் தவளையில் ஒரு பெரிய விலங்கு ஒலிந்திருக்கிறது. அது என்ன விலங்கு என்று 3 நொடிகளுக்குள் சொல்லுங்க… நீங்க பார்த்த விலங்கு என்ன?

ஆப்டிகல் இல்யூஷன் என்பது மனிதர்களின் பொதுவான பார்வைக் கோணம் மற்றும் ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை, அது ஒரு தோற்ற மயக்கம், மாயமில்லை மந்திரமில்லை. ஆனால், அது ஒரு மாயாஜாலாம். உயிரினங்கள் எல்லாமே பரிணாமவளர்ச்சியில் உருவானது என்பதால் ஒன்றின் சாயல் மற்றொன்றில் தெரியும். எல்லாவற்றுக்கும் ஏதேனும் ஒரு கூறாவது ஒற்றுமை இருக்கும். அந்த வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் உங்களை ஆச்சரியப்படுத்தலாம்.

இந்த படம் The sun தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஓவியத்தில் நீங்கள் பார்ப்பது ஒரு தவளை… ஆனால், இதில் மிகப்பெரிய விலங்கு ஒலிந்திருக்கிறது. தவளைக்குள் மிகப்பெரிய விலங்கா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். முதலில் பார்ப்பவர்கள் இது தவளை என்று கருதுகிறார்கள். சிறிது நேரத்தில் அவர்களின் முடிவை மாற்றிக்கொள்கிறார்கள். அப்படி என்ன விலங்கு தெரிகிறது என்று கேட்கிறீர்களா? என்ன விலங்கு என்று நீங்களே கண்டுபிடியுங்கள்.

இந்த படத்தை சுற்றி சுற்றி பாருங்கள்…. தவளை மறைந்து வேறு ஒரு விலங்கு தெரிகிறதா? நன்றாகப் பாருங்கள் தவளைக்குள் குதிரை தெரியும். குதிரைக்குள் தவளை தெரியும், இந்த ஓவியம். ஒரு தோற்ற மயக்கம், காட்சிப் பிழை, மாயாஜாலம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். இது போன்ற ஓவியங்களில் உள்ள இன்னொரு விலங்கை நெட்டிசன்கள் வெறித்தனமாகத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள ஓவியத்தில் முதல் பார்வையில் தவளையாக தெரிந்தது. திருப்பி பார்த்தால் குதிரையாக மாறுவதை நீங்களே பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“