Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு சூறாவளியைப் போலத் தாக்கி வருகிறது. ஆயிரக் கணக்கில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெளியானாலும் அது நெட்டிசன்களுக்கு யானைப் பசிக்கு கொடுத்த சோளப் பொறியாகப் போதாமல் ஆகிறது. அந்த அளவுக்கு நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் தீராப் பசியுடன் இருக்கிறார்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் இணையப் பொழுது போக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல், அது ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற ஒன்றாகவும் இருக்கிறது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு காட்டுப் பகுதியில் ஒரு அடர்ந்த புதரில் இரண்டு ஜாகுவார் சிறுத்தைகள் இருக்கிறது. அவற்றை 1 நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கள் ஜீனியஸ்தான்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒன்றும் பெரிய கடினமான புதிர் அல்ல. அதன் எளிமைதான் நெட்டிசன்களை ஒரு ராட்சத காந்தம் போல ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்க்ள் மனிதர்கள் எப்படி ஒரு காட்சியைப் பார்த்து உணர்ந்து அறிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது. சில படங்கள் இயல்பாகவே ஆப்டிகல் இல்யூஷன் கோணத்தில் அமைந்துவிடுகிறது.
அந்த வகையில், Martin Carpenter/Mediadrumimages புகைப்படம் ஒரு ஆப்டிகல் இல்யூஷனாக இருக்கிறது. எப்படி என்றால், ஒரு காட்டுப் பகுதியில், நீரோடை அருகே ஒரு அடர்ந்த புதரில் இரண்டு ஜாகுவார் சிறுத்தைகள் பதுங்கி இருக்கும்போது எடுக்கப்பட்டுள்ளது. அந்த படத்தில் ஒரு ஜாகுவாரை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், இன்னொரு ஜாகுவாரைக் கண்டுபிடிப்பது என்பது வலைவீசி தேடினாலும் சிக்காது. மிகவும் நுட்பமாக் உற்றுப் பார்த்தால் மாட்டுமே கண்டுபிடிக்க முடியும்?
நெட்டிசன்கள் சிலர் இந்தப் படத்தை சல்லடை போட்டு தேடிவிட்டு, இந்த படத்துல ஒரு ஜாகுவார்தான் இருக்கிறது. 2 ஜாகுவார் இருக்கிறது என பொய் சொல்லாதீர்கள் என்று கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் 2 ஜாகுவார்தான் இருக்கிறது. நீங்கள் நன்றாக உற்றுப் பார்த்து 2வது ஜாகுவரைத் தேடுங்கள்.
இந்நேரம் நீங்கள் அந்த 2வது ஜாகுவாரைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் நிஜமாகவே ஜீனியஸ்தான். ஏனென்றால், 2வது ஜாகுவாரைக் கண்டுபிடிப்பது மிகவும் ஒரு கடினமான சவால். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை, நீங்கள் இன்னும் 2வது ஜாகுவாரைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம் அது எங்கே மறைந்திருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிப்பவையாக இருப்பதால், நிறைய ஆப்டிகல் இல்யுஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.