Optical illusion game: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் பார்ப்பதற்கு கொஞ்சம் பயமாக இருக்கிறது இல்லையா? இந்த படத்தில் உள்ள மண்டை ஓட்டை கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்களுக்கான சவால். படத்தைப் பாருங்கள்!
சமீப காலமாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்கள் மத்தியில் அடிக்ஷனாகி வைரலாகி வருகிறது. அது அந்த அளவுக்கு இந்த படங்கள் சுவாரசியமான பொழுது போக்கு புதிராக இருக்கிறது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற இணைய புதிர்களாக இருக்கின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மூளைக்கு நல்ல பயிற்சி அளிக்கக் கூடியதாக இருக்கிறது. முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் குழப்பமாகவும் தெரியும். இறுதியில் விடை தெரியும்போது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் மூழ்கச் செய்யும்.

இந்த ஆப்டிகள் இல்யூஷன் படம், மற்ற படங்களில் இருந்து சற்று வித்தியாசமானது. ஏனெனில், இது பார்ப்பதற்கே பயமுறுத்துவதாக இருக்கிறது. படத்தில் பின்னணி ஒரு பெரிய மண்டை ஓடு போல தெரிந்தாலும், இந்த படத்தில் ஒரு மண்டை ஓடு இருக்கிறது. அந்த மண்டை ஓட்டை 20 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்களுக்கான சவால். இது மேலோட்டமான பார்வைக்கு, எளிதாக தெரியலாம். ஆனால், சுலபம் அல்ல. நீங்கள் ட்ரை பண்ணி பாருங்க.

இந்த படத்தைப் பார்த்த நெட்டிசன் ஒருவர், “இந்த படத்தில் நான் மண்டையை கண்டுபிடித்துவிட்டேன். ஆனால், 20 நொடிகளில் அல்ல, ஒரு நிமிடத்தில் கண்டுபிடித்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
மண்டை ஓட்டைத் தேடி ஓய்ந்துபோன மற்றொருவர் “நண்பர்களே, இந்த படத்தில் மண்டை ஓடு எங்கு வைக்கப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டுங்கள்”
என்று கேட்டுள்ளார்.
உங்களால் இந்த படத்தில் மண்டை ஓட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம்.
குறிப்பு: மண்டை ஓடு படத்தின் அடிப்பகுதியில் வலது பக்கத்தில் உள்ளது. மண்டை ஓட்டைக் கண்டுபிடிக்க இந்தக் குறிப்பு போதவில்லை என்றால், இன்னொரு குறிப்பு தருகிறோம்.
இந்த படத்தில் மண்டை ஓடு கீழே வலது பக்கம் ஏணியில் நிற்கும் நபருக்கு அருகில் உள்ளது.
இப்பொது கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. இன்னொரு படத்தைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். விடையைக் கீழே தருகிறோம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“