New Update
![Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, Optical Illusion Viral Photos, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், ஆப்டிகல் இல்யூஷன் சவால், Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images](https://img-cdn.thepublive.com/fit-in/1280x960/filters:format(webp)/tamil-ie/media/media_files/uploads/2023/01/Cotton-field-snake-I.jpg)
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கண்களை ஏமாற்றி மூளையைக் குழப்பும். நெட்டிசன்கள் வெறித்தனமாகத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த படம் உண்மையிலேயே ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்கள் ஜீனியஸ் என்று நிரூபிப்பதற்கான சவால் இது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பருத்திக் காட்டில் உலவும் பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ். ஏனென்றால், அது அவ்வளவு எளிதல்ல. கழுகுப் பார்வையில் தேடிப் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது இன்று நேற்று உருவாக்கப்பட்டது அல்ல. பண்டைய கிரேக்கத்தில் 3,500 அண்டுகளுக்கு முன்னரே இருந்ததாகக் கூறுகிறார்கள். கி.மு. 3ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்டாட்டில் ஆப்டிகல் இல்யூஷன் குறித்து குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த பழங்கால சிற்பங்கள் ஆப்டிகல் இல்யூஷனுக்கு உதாரணமாகக் கூறலாம். யாளி சிற்பத்தைக்கூட அந்த வரிசையில் கூறலாம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சில முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் உற்றுப் பார்க்கும்போது வேறு மாதிரியாகவும் தெரியும். சில ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மேலோட்டமாகப் பார்த்தால் அதில் மறைந்திருக்கும் விலங்கு தெரியாது. ஆனால், உற்றுப் பார்த்து ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால் கண்டுபிடித்து விடலாம்.
இந்த படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் பருத்திக் காட்டில் ஒரு பாம்பு உலா வருகிறது. அந்த பாம்பு எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் ஜீனியஸ். ஏனென்றால், ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அந்த அளவுக்கு கடினமானது. கழுகுப் பார்வையில் தேடுங்கள், பருத்திக்காட்டில் பாம்பை கண்டுபிடியுங்கள் ஜீனியஸ் என்று நிரூபியுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுதான். ஆனால், அது உங்கள் கண்களை ஏமாற்றி, மூளையைக் குழப்பி தலைமுடியைப் பிச்சிக் கொள்ளச் செய்யும். முடிவில் விடை தெரியும்போது உங்களை ரிலாக்ஸ் செய்து உற்சாகப்படுத்தும்.
இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் உள்ள பருத்திக் காட்டில் மறைந்திருக்கும் பாமை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களில் விடை கண்டுபிடிப்பதில் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை நீங்கள் இன்னும் பாம்பைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். பருத்திச் செடி இல்லாத இடங்களில் கவனமாக உற்றுப் பார்த்து தேடுங்கள்.
இப்போது நீங்கள் பருத்திக் காட்டில் உலவும் பாம்பை கழுகுப் பார்வையில் எளிதில் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். கண்டுபிடிக்கவில்லை என்றால் பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.