scorecardresearch

இவங்க மழையில மாட்டிக்கிட்டாங்க… 10 நொடிகளில் குடையைக் கண்டுபிடிச்சு கொடுத்தா நன்றி!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஒரு காட்டுப் பகுதியில் ட்ரக்கிங் சென்றவர்கள் மழையில் மாட்டிக்கொள்கிறார்கள். அவர்கள் குடையைத் தொலைத்துவிட்டு தேடுகிறார்கள். அவர்களுக்கு 10 நொடிகளில் குடையைக் கண்டுபிடிச்சு கொடுத்தா உங்களுக்கு நன்றி.

இவங்க மழையில மாட்டிக்கிட்டாங்க… 10 நொடிகளில் குடையைக் கண்டுபிடிச்சு கொடுத்தா நன்றி!

Optical illusion game: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் மிகவும் வித்தியாசமானது. ஒரு காட்டுப் பகுதியில் ட்ரக்கிங் சென்றவர்கள் மழையில் மாட்டிகொண்டார்கள். குடையைத் தொலைத்துவிட்டு தேடுகிறவர்களுக்கு 10 நொடிகளில் கண்டுபிடிச்சு கொடுத்தா உங்களுக்கு நன்றி.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவில் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் அதிக அளவில் வெளியிடப்பட்டு பகிரப்படுகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வேலை நெருக்கடிகளில் சிக்கி சோர்ந்து போய் இருப்பவர்களுக்கு ஒரு பொழுதுபோக்கான புதிர் விளையாட்டாக இருக்கிறது.

Depor தளத்தில் வெளியாகி உள்ள இந்த அழகான டிஜிட்டல் ஓவியப் படத்தை பார்த்த உடனே உங்களுக்கு புரிந்துவிடும். இரண்டு பெண்கள், ஒரு ஆண் ஒரு காட்டுப் பகுதிக்கு ட்ரெக்கிங் சென்றிருக்கிறார்கள். அந்த காட்டில் மரங்கள் நிறைந்தபகுதியில் மான், பறவை, அனில் எல்லாம் இருக்கிறது. திடீரென அங்கே மழை வந்துவிடுகிறது. மழை வந்தபிறகுதான் தாங்கள் கொண்டுவந்த குடை நினைவுக்கு வருகிறது. ஆனால், அவர்கள் அந்த குடையை பக்கத்தில் அங்கே எங்கேயோ வைத்துவிட்டு மறந்துவிட்டிருக்கிறார்கள். குடையைத் தேடும் அவர்களுக்கு அங்கே பெய்யும் மழை கனமழையாக மாறுவதற்குள் அவர்களுக்கு 10 நொடிகளில் குடையைக் கண்டுபிடித்து கொடுத்தால் அவர்கள் உங்களுக்கு நன்றி சொல்வார்கள். உங்களுக்கும் ஒரு நல்ல காரியத்தை செய்த உணர்வு இருக்கும். அதனால், மழையில் நனையும் அவர்களுக்கு குடையைக் கண்டுபிடித்து கொடுங்கள் பார்க்கலாம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் எந்த அளவுக்கு சுவாரசியமாக இருக்கும். என்றால், அவை பார்ப்பதற்கு முதலில் எளிமையாக இருக்கும். விடை தேடத் தொடங்கினால், உங்கள் கண்களை ஏமாற்றும். தீவிரமாகத் தேடினால் உங்கள் மூளையைக் குழப்பும் முடிவில் விடை தெரியும்போது ஆச்சரியத்தில் ஆழ்த்தி மகிழ்ச்சி அளிக்கும்.

நீங்கள் இந்நேரம் குடையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். மழையில் மாட்டிக்கொண்டவர்களுக்கு உரிய நேரத்தில் குடையைக் கண்டுபிடித்து கொடுத்த உங்களுக்கு நன்றி. பாராட்டுகள்.

ஒருவேளை, இன்னும் நீங்கள் குடையைக் கண்டுபிடிக்கவில்லை என்றால் உங்களுக்காக ஒரு குறிப்பு தருகிறோம். குடை மரத்தை ஒட்டி இருக்கிறது. இப்போது படத்தை மீண்டும் ஒருமுறை நன்றாகப் பார்த்து குடையைக் கண்டுபிடித்து கொடுங்கள்.

குடையைக் கண்டுபிடித்துவிட்டிருந்தால் நல்லது. கண்டுபிடிக்கவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக குடை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி தருகிறவையாகவும் இருக்கிறது. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Tamil App.

Web Title: Optical illusion can you spot the umbrella in this image please get thanks