Advertisment

குரூப்புல டூப்பு… 10 செகண்ட்ல பெண்ணின் கணவரை கண்டுபிடிச்சா நீங்கதான் கில்லாடி!

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பெண் ஒருவர் தனது கணவனைத் தேடுவது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில், மூன்று ஆண்கள் அவரது வலது பக்கத்தில் அமர்ந்துள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optical Illusion: Can You spot the woman's husband in 10 seconds? Tamil News

ஆப்டிகல் இல்யூஷன் கி.மு 3,500 ஆண்டுகளுக்கு முன் பண்டைய கிரேக்கத்தில் இருந்ததாக தொல்லியல் ஆதாரங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

Optical Illusion: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் மூளையை ஏமாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட படங்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் மனதைக் குழப்புவதற்காக உருவாக்கப்பட்டவை. ஒருமுறை ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை எதிர்கொண்டீர்கள் என்றால் அதன் சுவாரசியத்தில் மூழ்கிப்போவீர்கள்.

Advertisment

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பெண் ஒருவர் தனது கணவனைத் தேடுவது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில், மூன்று ஆண்கள் அவரது வலது பக்கத்தில் அமர்ந்துள்ளனர். அனைவரும் சரியான கணவர் போல் தோற்றமளிக்கின்றனர். இந்த மூன்று ஆண்களில் இருந்து பெண்ணின் கணவர் யார் என்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா? என்று பாருங்கள்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இன்று நேற்று தோன்றியது அல்ல. அது ஒரு புதிராக சவாலாக விளையாடப்பட்டிருக்கும் என்பது உறுதியாக சொல்ல முடியாவிட்டாலும், ஆப்டிகல் இல்யூஷன் ஏற்கெனவே இருந்திருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் கி.மு 3,500 ஆண்டுகளுக்கு முன் பண்டைய கிரேக்கத்தில் இருந்ததாக தொல்லியல் ஆதாரங்கள் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

கி.மு 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவ அறிஞர் அரிஸ்டாடில் ஆப்டிகல் இல்யூஷன் என்கிற தோற்ற மயக்கத்தைக் குறிப்பிடுகிறார். இந்தியாவில் உள்ள பழங்கால சிற்பங்கள், ஓவியங்கள் பலவும் ஆப்டிகல் இல்யூஷன் கோணத்தில் பார்க்கலாம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் இணைய யுகத்தில் நெட்டிசன்கள் விரும்பி விளையாடும் சவாலாக உள்ளது.

கணவரை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?

publive-image

10 வினாடி காலக்கெடுவுக்குள் பெண்ணின் கணவரை அடையாளம் காண்பது தான் உங்களுக்கு இன்று வழங்கப்பட்டுள்ள சவால். இந்த மூன்று ஆண்களில் ஒருவர் உண்மையில் அந்தப் பெண்ணின் கணவர், ஆனால் சரியான பதிலை நீங்கள் எவ்வாறு ஊகிக்க முடியும்? இந்தக் கேள்வி ஒரு உண்மையான சவாலை முன்வைக்கிறது. நீங்கள் இன்னும் புதிரை கண்டுபிடித்தீர்களா?.

இல்லையென்றால், இங்கே தீர்வைப் பார்க்கலாம்.

பெண்ணின் கையில் "பின்" போன்ற ஒரு பேன்ட் சுற்றியிருப்பதை கவனித்தீர்களா? குறிப்பிடத்தக்க வகையில், அதே "பின்" இடதுபுறத்தில் இருந்து மூன்றாவது நபரின் டக்ஷீடோவில் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம். இடதுபுறத்தில் இருந்து மூன்றாவதாக உள்ள நபரே உண்மையில் அந்தப் பெண்ணின் கணவர் என்பதை அறிய முடிகிறது.

publive-image

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்து செய்திகளையும் உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெற https://t.me/ietamil

Viral Social Media Viral Viral Photo Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment