Advertisment

கோதுமை வயலில் புகுந்த பாம்பு… 5 நொடிகளில் கண்டுபிடிச்சு அலெர்ட் பண்ணுங்க!

Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கோதுமை வயலில் அறுவடை செய்யும் நேரத்தில், புகுந்த பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடித்து அலெர்ட் பண்ண முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வை சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் உங்களுக்கு கழுகுப் பார்வைங்க.

author-image
WebDesk
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் சவால், ஆப்டிகல் இல்யூஷன் படம், யானையைக் கண்டுபிடிக்க முடியுமா, யானை, சிங்க, புலி, பாம்பு, Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள், பளபளக்கும் கண்ணாடி கற்களுக்கு இடையே வைரங்களைக் கண்டுபிடிப்பது போன்றது. போலிகளுக்கு இடையே உண்மையைக் கண்டுபிடிப்பது போன்றது. சில நேரங்களில் உண்மைகளே பொய்யைப் போலத் தோற்றமளிக்கும். இப்படி ஒரு குழப்பமான சுவாரசியம்தான் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்.

Advertisment
publive-image

இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கோதுமை வயலில் அறுவடை செய்யும் நேரத்தில், புகுந்த பாம்பை 5 நொடிகளில் கண்டுபிடித்து அலெர்ட் பண்ண முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வை சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் உங்களுக்கு கழுகுப் பார்வைங்க.

ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம் என்று சொன்னாலும் அது ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு. உங்கள் பார்வையை வேறு எங்கோ திசை திருப்பி விட்டுவிட்டு நீங்கள் தேடும் விலங்கை வேறு எங்கோ தந்திரமாக மறைத்து வைத்திருப்பது. அசலுக்கு நகலுக்கும் வித்தியாசம் தெரியாத அளவுக்கு ஒரு மேஜிக் செய்யப்பட்டிருக்கும். இந்த குழப்பத்தில் சிக்கிக் கொள்பவர்கள் கடைசி வரை மறைந்திருக்கும் விலங்கை தேடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாகத் தேடினால், மறைந்திருக்கும் விலங்கைக் கண்டுபிடித்து உற்சாகம் அடையுங்கள்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு கோதுமை வயலில் அறுவடை செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், இந்த கோதுமை வயலில் ஒரு மஞ்சள் நாகம் மறைந்திருக்கிறது. அந்த மஞ்சள் நாகம் கோதுமை கதிர்களா? இல்லை பாம்பா என்று தெரியாத அளவுக்கு ஒரே நிறத்தில் தோன்றி ஒரு தோற்ற மயக்கத்தை நிகழ்த்துகிறது. ஆனால், நீங்கள் ஸ்மார்ட்டாக யோசித்து கோதுமை வயலில் பாம்பு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து அறுவடை செய்பவர்களை அலெர்ட் பண்ணுங்க. அதிலும் 5 நொடிகளில் விரைவாக கண்டுபிடித்து அலெர்ட் பண்ண முடியுமா? ட்ரை பண்ணி பாருங்க.

நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் உள்ள கோதுமை வயலில் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் உங்களுக்கு கழுகுப் பார்வைங்க. உங்களுக்கு பாராட்டுகள்.

publive-image

ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள கோதுமை வயலில் புகுந்த பாம்பை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். கோதுமை பாம்பு எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். அறுவடை செய்த கோதுமை கதிர்கள் மீது கவனமாகப் பாருங்கள். பாம்பு தென்படலாம்.

இப்போது படத்தில் மறைந்திருக்கும் பாம்பு எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். சிலர் பாம்பு இல்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Viral Photo Viral News
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment