/tamil-ie/media/media_files/uploads/2023/04/cats-1-1.jpg)
ஆப்டிகல் இல்யூஷன்
Optical illusion game: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பாறையில் மறைந்திருக்கும் 2 பூனைகளை 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்பட்டுள்ளது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யுஷனில் நீங்கதான் புத்திசாலி.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/cats-1-1-1.jpg)
இணையத்தில் ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கில் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் மத்தியில் ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புலி, சிங்கம், கரடி, சிறுத்தை போன்ற விலங்குகளைக் கண்டுபிடிக்க முடியுமா என்ற சவால் படங்களுக்கு பெரிய வரவேற்பு உள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/cats-two.jpg)
நெட்டிசன்களை எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் சவால் அமைந்துள்ளது. moiillusions தளத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தில் பாறையில் 2 பூனைகள் மறைந்திருக்கிறது. அந்த பூனைகள் எங்கே மறைந்திருக்கிறது என 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்பட்டுள்ளது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிப்பதில் நீங்கதான் புத்திசாலி. ஏனென்றால், கொஞ்சம் ஸ்மார்ட்டாகத் தேடினால் 2 பூனைகளையும் எளிதில் கண்டுபிடித்துவிடலாம். அதனால், நீங்களும் பூனையைத் தேடுங்கள்,கண்டுபிடிக்க ட்ரை பண்ணி பாருங்க.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கிற விலங்குகளை கண்டுபிடிப்பது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தொலைத்துவிட்டு தேடுவதைப் போன்றது. இன்னும் சரியாகச் சொல்வதென்றால், ஆட்டை தோள் மீது வைத்துக்கொண்டு ஊர் முழுவதும் ஆட்டை தேடியக் கதையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள் இல்லையா? அதனால், ஸ்மார்ட்டாக யோசியுங்கள் ஸ்மார்ட்டாகத் தேடுங்கள்.
இந்நேரம் நீங்கள் பாறையில் மறைந்திருக்கும் 2 பூனைகளைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே ஆப்டிகல் இல்யூஷன் புதிரில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் புத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை நீங்கள் இந்த படத்தில் மறைந்திருக்கும் 2 பூனைகளைக் கண்டுபிடிக்க வில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக 2 பூனைகளும் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
/tamil-ie/media/media_files/uploads/2023/04/cats-three.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் என்பது வெறுமனே ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு அல்ல. அது கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.