New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/30/find-elephant-1-2025-06-30-14-10-08.jpg)
அறையில் மறைந்திருக்கும் யானையை 7 வினாடிகளில் கண்டிபிடிக்க முடியுமா? Credit: Dudolf
Optical Illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அறையில் மறைந்திருக்கும் யானையை 7 வினாடிகளில் கண்டிபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது அதிபுத்திசாலிகளுக்கான சவால், ட்ரை பண்ணி பாருங்கள்.
அறையில் மறைந்திருக்கும் யானையை 7 வினாடிகளில் கண்டிபிடிக்க முடியுமா? Credit: Dudolf
Optical Illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல, அது லட்சக் கணக்கான நெட்டிசன்களை கவர்ந்து ஈர்க்கும் ராட்சத காந்தம் அதன் சுவாரசியத்தால் ஈர்த்து வருகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அறையில் மறைந்திருக்கும் யானையை 7 வினாடிகளில் கண்டிபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது அதிபுத்திசாலிகளுக்கான சவால், ட்ரை பண்ணி பாருங்கள்.
“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்,
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது..
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது” என்ற மருதகாசியின் வரிகள் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களுக்கு கச்சிதமாகப் பொருந்திப் போகிறது.
இந்த சவாலில் கண்ணை நம்பாதே உன்னை ஏமாற்றும், ஏனென்றால், பார்த்தால் தெரியாது, தேடினால் தெரியும்.
ஆப்டிகல் இல்யூஷன் காட்சி என்பது இன்று நேற்று உருவானது அல்ல மனிதன் தோன்றிய காலத்திலேயே உருவாகி விட்டது. மனிதன் எளிதில் வேறுபடுத்திப் பார்க்க முடியாது உருவம் அல்லது காட்சி. மனிதன் எல்லாவற்றையும் ஒப்பிட்டு வேறுபடுத்திப் பார்க்கிறான். அப்படி எளிதில் வேறுபடுத்தி அறியமுடியாதவைகள் குழப்பத்தை அளிக்கின்றன. அதற்கு காரணம், எல்லாமே பரிணாம வளர்ச்சியில் இருந்து தோண்றியவை. விலங்குகளில் எல்லா உயிரினங்களிலும் ஏதோ ஒரு ஒற்றுமை இருக்கிறது. அது உருவத்தில், உடல் அமைப்பில் வாழ்க்கை முறையில், சமூக வாழ்க்கையில், உணவு முறையில் என ஏதோ ஒரு வகையில் ஒற்றுமைகள் இருக்கின்றன. அந்த ஒற்றுமையை வைத்துதான் இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படம் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை வரைவதில் பிரபலமான ஹங்கேரி நாட்டு ஓவியர் ஜெர்ஜ்லி டுடாஸ் டுடால்ஃப் வரைந்தது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுது போக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் அறையில் மறைந்திருக்கும் யானையை 7 வினாடிகளில் கண்டிபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இது அதிபுத்திசாலிகளுக்கான சவால், ட்ரை பண்ணி பாருங்கள்.
அவ்வளவு பெரிய யானை, பார்த்தால் தெரியவில்லையே என்று நீங்கள் கூறுவது கேட்கிறது. இந்த சவாலில், உங்களுக்கு ஒரு அறிவுரை மிகவும் கூர்மையாக நுட்பமாகத் தேடிப் பாருங்கள் என்பதுதான்.
நீங்கள் இந்நேரம் அறையில் மறைந்திருக்கும் யானையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கு பாராட்டுகள். நீங்கள் அதிபுத்திசாலிதான்.
அறையில் யானையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம். இந்த படத்தில் அலமாரியில் கூர்மையாக கவனியுங்கள் யானை தெரியும்.
இப்போது நீங்கள் மிகவும் எளிதாக யானையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். ஆனால், சிலர் இன்னும் கண்டுபிடிக்க முடியாமல் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக யானையைக் கண்டுபிடித்து தருகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.