ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதலில் குழப்பத்தையும் பிறகு தெளிவையும் அளிப்பவை. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் புதிர்களால் ஒரு முடிவில்லாத குழப்பத்தை நிரப்பிக்கொண்டிருக்கிறது. இந்த வகையான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், பார்வையாளர்களை ஈர்த்து வைரலாகி வருகிறது.

உங்களை ஆச்சரியப்பட வைக்கும் மற்றொரு ஆப்டிகல் இல்யூஷன் படம் இது. இதில் இரண்டு பறவைகள் மறைந்திருக்கின்றன. ஆனால், இந்தப் படத்தைப் பார்த்து என்ன ஒரு பறவை கூட இல்லையே என்று பலரும் குழப்பமடைந்துள்ளனர். ஏனென்றால், இந்த படத்தில் மறைந்திருக்கும் 2 பறவைகளை இதுவரை 1 சதவீதம் பேர் மட்டுமே கண்டுபிடித்திருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது.
கூர்மையான பார்வை கொண்ட அந்த ஒரு சதவீதம் பேரில் நீங்களும் சேர விரும்பினால், இந்த டால்ஃபின் ஆப்டிகல் இல்யூஷனில் இரண்டு பறவைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடிகக் முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம், உங்களுக்கு உதவ சில குறிப்புகளைத் தருகிறோம்.
ரெடிட்டில் வெளியான இந்த படத்தை சற்று உற்று கவனியுங்கள்… டால்ஃபீனின் வாய் பறவையின் அலகாகத் தெரிகிறது பாருங்கள்… அதே போல, டால்ஃபீனின் வால் பகுதியை உற்று கவனியுங்கள். அதுவும் பறவை போல தெரிவதைப் பார்க்க முடியும்.
ஆனால், பார்வையாளர்கள் பறவை மட்டுமல்ல, அவர்களுக்கு என்னவெல்லாம் தெரிந்தது என்பதை கூறியுள்ளார்கள். ஒரு ரெடிட் பயனர், “ஒரு டால்பின், பறவை, மீன் மற்றும் தண்ணீரைப் பார்க்கிறேன்” என்று கூறியுள்ளார். உங்களுக்கு என்னவெல்லாம் தெரிகிறது என்று சொல்லுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“