Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கிறிஸ்துமஸ் மரத்தில் மறைந்திருக்கும் பூனையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் தேடும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது மனதை மயக்கி ஆழமாக கவர்ந்திழுக்கக் கூடியவை. ஒரு பொருளின் அல்லது படத்தின் வடிவத்தை மாற்றிக் காட்டும். படத்தில் உள்ள விஷயங்களை கண்கள் தெளிவாகப் பார்த்து மூளை புரிந்துகொள்வதை சவால் செய்யும். இதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் உளவியல் பகுப்பாய்வுத் துறையின் ஒரு பகுதி என்பதை ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன. இது நீங்கள் விஷயங்களை எப்படி உணர்கிறீர்கள் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. ஒரு மனிதனின் இயல்பான மூளை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் வெவ்வேறு உணர்வை உருவாக்கும் விஷயங்களை அல்லது படங்களைப் பார்க்க முடியும்.
இந்த படம் reddit சமூக வலைதளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். டிசம்பர் மாதம் பிறப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ளன. டிசம்பர் என்றாலே கிறிஸ்துமஸ்தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். டிசம்பர் மாதங்களில் கிறிஸ்துமஸ்-க்கு முன்னதாகவே வீடுகளில் கிறிஸ்துமரங்கள் வைப்பது, நட்சத்திரங்களை வைப்பது, கிறிஸ்துமஸ் குடில் அமைப்பது என்று தயாராகிவிடுவார்கள். இந்த கிறிஸ்துமஸை ஒட்டி இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை சவாலுக்காக எடுத்துள்ளோம்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கிறிஸ்துமஸ் மரத்தில் மறைந்திருக்கும் பூனையை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் தேடும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது, 1... 2... 3... 4... 5... நேரம் முடிவடைந்துவிட்டது.
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் கிறிஸ்துமஸ் மரத்தில் மறைந்திருக்கும் பூனையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நீங்கள் கூர்மையான பார்வைத் திறனும், வேகமாக தேடும் திறனும் உடையவர், உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், சிலர் இன்னும் பூனை எங்கே இருக்கிறது என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து பாருங்கள், பூனை வெளியே தெரியும்.
இப்போது நீங்கள் மிகவும் எளிதாகப் பூனையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். உங்களுக்கும் பராட்டுகள். ஆனால், சிலர் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார்கள். அவர்களுக்காக இந்த கிறிஸ்துமஸ் மரத்தில் பூனை எங்கே மறைந்திருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுமட்டுமல்ல ஒரு காட்சியைப் பார்க்கும்போது முழுவிவரத்துடன் பார்க்க உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிறது. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.