New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/08/Optical-Illusion3.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் என்பது நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய நமது சொந்த காட்சிப் புரிதலைப் பற்றிய நுண்ணறிவைத் தரும் ஒரு குறிப்பிடத்தக்க கருவியாகும். இது ஒரு குழப்பமான அல்லது புதிரான ஒரு படமாக இருக்கலாம. அல்லது இயற்கையாகவே இந்த புகைப்படம் அவ்வாறு எடுக்கப்பட்டிருக்கலாம்.
விலங்குகள் வேட்டையாடுபவர்களை உருமறைப்பு மூலம் ஏமாற்றுவது போல, மனிதர்களும் கலை மூலம் ஆப்டிகல் இல்யூஷன் பற்றிய கருத்து மற்றும் பண்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படங்களுக்கு ரஷ்ய கலைஞரான இகோர் லைசென்கோ ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
மனதை ஈர்க்கும் இந்த படம் ஒரு பள்ளத்தாக்கு. ஆனால் இது பல உருவங்களால் ஒன்றாக இணைக்கப்பட்டதை காட்டுகிறது. சாதாரணமா பார்த்தால், ஒரு மாதிரியாகவும் உற்று நோக்கினால் வேறு மாதிரியாகவும் தெரியும் இந்த படம் நமது மூளைக்கு பலமான வேலையை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
இன்றைய சவால் உங்களின் பார்வை திறனுக்கு முக்கிய சோதனையாகும், மேலும் இந்தப் படத்தில் நீங்கள் கவனிக்கும் முதல் விஷயத்தை வைத்து உங்கள் கவனம் எதைப்பற்றியது என்பதை கணித்தவிடலாம்.
பெண்கள்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படத்தில் முதல் பார்வையில் இரண்டு பெண்களை நீங்கள் பார்த்திருந்தார். மிகவும் கண்ணியமான கண்காணிப்பு திறன் கொண்டவர்கள் என்று கூறப்படுகிறது - நிபுணர்களின் கூற்றுப்படி, எந்த அடிப்படை தகவலையும் தவறவிடாமல் இருக்க போதுமானது.
ஒரு நாய்
உண்மையில் இரு பரிமாண பிம்பம் என்ன என்பதை ஆழமாக ஆராய்ந்தால், மேசா போன்ற நிலப்பரப்பில் இருந்து வெளிவருவது போல் தோன்றும் நாயின் தலை. அதேபோல் கோரையை முதலில் கண்டறிந்த பார்வையாளர்கள் சராசரியை விட சற்று அதிகமாக பார்வைத்திறன் கொண்டவர்கள்.
ஒரு முகம்
வல்லுனர் பகுப்பாய்வின்படி நீங்கள் ஒரு மனித முகத்தை நேரடியாகப் பார்க்க முடிந்தால் விவரங்களுக்கு குறைபாடற்ற கவனம் செலுத்துவதாகவும், உங்களின் சக்திவாய்ந்த பார்வையின் மூலம், பெரிய பிரச்சனைகளைத் தீர்ப்பவர்களாக இருக்க முடியும் என்றும் தெரிவிக்கிறது.
சுவாரஸ்யமாக, ஒரு பீடபூமியாகத் தோன்றும் முகம் உண்மையில் புகழ்பெற்ற ஐரிஷ் கவிஞர் ஆஸ்கார் வைல்டின் உருவப்படமாகும், இந்த ஒளியியல் மாயையை உருவாக்கியவர் புத்திசாலித்தனமாக இதை வைத்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.