New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/04/wheat-field-snake-1-481383.jpg)
கோதுமை அறுவடை நடக்கும் வயலில் அசையாமல் படுத்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?
கோதுமை அறுவடை நடக்கும் வயலில் அசையாமல் படுத்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா?
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரே நிறத்தில் இருக்கும் இடங்களில் இருக்கும் விலங்குகள் பார்வைக்குப் புலனாவதில்லை. பச்சை மரத்தில் இருக்கும் பச்சைப் பாம்பு தெரிவதில்லை. தண்ணீருக்குள் இருக்கும் தண்ணீர் பாம்பு தெரிவதில்லை. யானைகளுக்கு இடையே இருக்கும் காண்டாமிருகத்தை கண்டுபிடிக்க முடிவதில்லை.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கோதுமை அறுவடை நடக்கும் வயலில் அசையாமல் படுத்திருக்கும் பாம்பை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா உங்களுக்கு கழுகுப் பார்வை. முயற்சி செய்து பாருங்கள், இது உங்கள் பார்வைத் திறனுக்கான சோதனை.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஒளியியல் மாயை. ஆப்டிகல் இல்யூஷன் சவால் பார்வைத் திறன் மற்றும் யோசித்து தேடும் திறனுக்கான சவால். மனிதனின் பார்வைத் திறன் என்பது ஒன்றில் இருந்து மற்றொன்றை வேறுபடுத்திப் பார்ப்பதுதான். ஆனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்களுடைய இந்த திறனை மேலும் கூர்மையாக்குகிறது. ஏனென்றால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கண்களை ஏமாற்றி மூளையைக் குழப்பி, முழியைப் பிதுக்கும். ஆனால், நீங்கள் கூர்மையான பார்வைத் திறன்கொண்ட கழுகுப் பார்வை உடையவர் என்றால் மிக எளிதாகக் கண்டுபிடிக்கலாம்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. கோதுமை அறுவடை நடக்கும் வயலில் ஒரு கோதுமை நிற பாம்பு அசையாமல் படுத்திருக்கிறது. அந்த பாம்பு கோதுமை நிறத்தில் இருப்பதால் அது எங்கே இருக்கிறது என தெரியவில்லை. அதனால், நீங்கள் இந்த கோதுமை வயலில் அசையாமல் படுத்திருக்கும் 5 வினாடிகளில் கண்டுபிடித்து கூற முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா உங்களுக்கு கழுகுப் பார்வை. முயற்சி செய்து பாருங்கள், இது உங்கள் பார்வைத் திறனுக்கான சோதனை.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் கோதுமை அறுவடை நடக்கும் வயலில் மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் கூர்மையான பார்வைத் திறன் உடையவர். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் பாம்பு இல்லை என்று சத்தியம் செய்கிறார்கள். ஆனால், கழுகுப் பார்வை கொண்டவர்கள் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சிலர் பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பாம்பு எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். கோதுமை வயலில் அறுவடை செய்யப்பட்ட கதிர்களின் மீது நன்றாக உற்றுப்பாருங்கள். கோதுமை நிற பாம்பு கண்ணில் படலாம்.
இப்போது நீங்கள் ஒரு கோதுமை நிறப் பாம்பைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே உங்களுக்கு கூர்மையான பார்வைத் திறன் உள்ளது. இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.