ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் ஒரு புயலைப் போல வீசி பரவி வருகிறது. பார்ப்பவர்களை குழப்பமடையச் செய்து இறுதியில் ஆச்சரியப்படும்த்தும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சுவாரஸ்யமான் ஒரு பொழுது போக்கு புதிர் விளையாட்டுகளாக பார்வையாளர்களை ஈர்த்து வருகின்றன. அது மட்டுமல்லாமல் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், பார்ப்பவரின் முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து அவர்களின் ஆளுமையையும் குணநலனையும் வெளிப்படுத்துவதாக உள்ளன. அதே நேரத்தில், அனைத்து ஆப்டிகல் இல்யூஷன் படங்களும் ஆளுமையை வெளிப்படுத்தும் படங்கள் இல்லை என்பதையும் தெரிந்துகொள்ள வேண்டும்.
பீர் கோப்பைகள் மற்றும் பீர் பாட்டீல்களுக்கு இடையே மறைந்திருக்கும் வெற்றிக்கோப்பையை ஒரு நிமிடத்தில் கண்டுபிடியுங்கள் என்று சவால் விடும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம், சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்தப் படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் பீர் கோப்பைகளையும் பீர் பாட்டில்களையும் சல்லடை போட்டு தேடியும் வெற்றிக்கோப்பையைக் கண்டுபிடிக்க முடியாமல் குழப்படமடைந்து நிற்கிறார்கள். இது ஒரு ஆப்டிகல் இல்யூஷன் புதிராக இருந்தாலும் மிகவும் சுவாரஸ்யமாகவும் வேடிக்கையாகவும் இருக்கிறது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
பீர் கோப்பைகளுக்கு மத்தியில் பொன்னிற வெற்றிக் கோப்பையை யாராலும் ஒரு நிமிடத்தில் கண்டுபிடிக்க முடியாவிட்டால் என்ன, நான் கண்டுபிடிக்கிறேன் என்று சவால் விட்டு போட்டியில் இறங்கினால் உங்களுக்கு பாராட்டுகள்.

ஸ்டோன்கேட் பப் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், பீர் கோப்பைகள் மற்றும் பீ பாட்டீல்களுக்கு இடையில் எங்கோ ஒரு இடத்தில் பொன்னிற் வெற்றிக்கோப்பை மறைந்திருக்கிறது. இதை ஒரு நிமிஷத்தில் கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் உங்கள் கூர்மையான பார்வைக்கு பாராட்டுகள். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. அந்த வெற்றிக்கோப்பை எங்கே இருக்கிறது என்று உங்களுக்கு பதிலளிக்கிறோம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“