Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் மீது ஆர்வம் கொண்டர்கள் சாகச மனநிலையில் இருப்பார்கள். அப்படி ஆர்வமுள்ளவர்கள் ஒரு வினோதமான ஆப்டிகல் இல்யூஷன் சவாலை எதிர்கொள்ள காட்டுக்குச் செல்கிறார்கள். அதில் ஒருவர் 50 நொடிகளுக்குள் படத்தில் உள்ள 25 விலங்குகளைக் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை யார் உருவாக்கியது என்று தெரியவில்லை. மிகவும் சவாலான இந்த ஆப்டிகள் இல்யூஷன் படத்தில் 25 விலங்குகள் இருக்கிறது. ஆனால், இது மேலோட்டமாகப் பார்ப்பதற்கு ஒரு மனிதனின் தலையைப் போலத் தெரிகிறது. ஆனால், அதற்கு இத்தனை விலங்குகள் மறைந்திருக்கிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் 16 ஆம் நூற்றாண்டின் கலைஞரான கியூசெப் ஆர்கிம்போல்டோவால் வரையப்பட்டதாகத் தெரிகிறது. அவர் பழங்கள், காய்கறிகள் மற்றும் பூக்கள் போன்ற பொருட்களைக் கொண்ட ஓவியத் தலைகளை பிரபலமாக வரைந்தார்.
இந்த படம் கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக இணையத்தில் பரவி வரும் நிலையில், சமீபத்தில் டிக்டோக்கில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் உள்ள அனைத்து விலங்குகளையும் 50 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிஅது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலை இதுவரை 0.01% நபர்கள் மட்டுமே கண்டுபிடித்திருக்கிறார்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள 25 விலங்குகளையும் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் ஜீனியஸ்க்கெல்லாம் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை, உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள அனைத்து விலங்குகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். ஏனென்றால், இது மிகவும் கடினமான சவால்.
சிலர் 15 முதல் 20 விலங்குகளைக் கண்டுபிடித்து விட்டதாகக் கூறுகிறார்கள். நீங்கள் நிஜமாகவே, 0.01% மட்டுமே உள்ள ஜீனியஸ்களுக்கு எல்லாம் ஜீனியஸ் ஆவீர்கள். இந்த படத்தில் உள்ள எல்லா விலங்குகளையும் கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம்.
இந்த படத்தின் உச்சியில் இருக்கும் யானையைக் கண்டறிவது மிகவும் எளிது. அதே நேரத்தில் பார்வையாளரின் கண்கள் ஓவியத்தின் அடிப்பகுதியில் உள்ள வெளிப்படையாகத் தெரியும் கங்காரு மற்றும் கிரிஸ்லி கரடியால் ஈர்க்கப் படுகிறார்கள்.
அடுத்து ஒரு புலி, ஒரு ஆமை, ஒரு குதிரை மற்றும் ஒரு வெள்ளை முயல் ஆகியவை இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் மையத்தில் பொதுவாகக் காணப்படுகின்றன. ஆனால், அங்கிருந்து விஷயங்கள் மிகவும் தந்திரமாக இல்யூஷன் செய்யப்பட்டுள்ளன.
இன்னும் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், என்னென்ன விலங்குகள் இருக்கிறது என்பதை இங்கே பட்டியலிடுகிறோம்.
யானை, முள்ளம்பன்றி, டால்பின், நத்தை, கோபர், நரி, சோம்பல், முதலை, பாம்பு மற்றும் ஆமை ஆகியவற்றைக் கண்டுபிடிக்க முடியும்.
இந்த படத்தில் யானை, திமிங்கலம், கங்காரு, கிளி, நாரை, நட்சத்திர மீன், வெட்டுக்கிளி, குதிரை, முயல், ஆமை, நத்தை, பச்சோந்தி, புலி, குரங்கு, மயில், கரடி, பாம்பு, இருவாச்சிப் பறவை, பன்றி, சிப்பி, நரி, பருந்து, எலி, டால்ஃபீன், உடும்பு என படத்தில் மொத்தம் 25 விலங்குகள் இருக்கின்றன பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.