Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லா தரப்பினருக்கும் பிடித்தமான விளையாட்டாக மாறி இருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிப்பது IQ டெஸ்ட்டாக இருக்கிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் மறைந்திருக்கும் நரி சாதாரணமானவர்களின் பார்வைக்கு தெரியாது. ஆனால், ஜீனியஸ்களுக்கு மட்டுமே தெரியும். இந்த படத்தில் மறைந்திருக்கும் தந்திரக்கார நரியை 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்கள் ஜீனியஸ்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பதை தமிழில் மொழியில் ஓளியியல் மாயை என்று கூறலாம். இதில் இல்யூஷன் என்ற வார்த்தை illudere என்ற வார்த்தையிலிருந்து உருவானது. இதற்கு, கேலி செய்வது அல்லது ஏமாற்றுவது என்று பொருள். எனவே, மனிதனின் கண்களையும் மூளையையும் மயக்கி ஏமாற்றுவதே ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் அடிப்படைக் கோட்பாடு.
மனித மூளையின் செயல்பாட்டைப் புரிந்துகொள்வதற்கு ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உதவியாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மூளையில் ஆப்டிகல் இல்யூஷன்களின் தாக்கம் பற்றிய ஆய்வுகளிலிருந்து பெறப்பட்ட நுண்ணறிவு, நாம் ஆப்டிகல் இல்யூஷன்களை விடுவிக்கும்போது, மூளையின் எந்தப் பகுதிகள் செயல்படுகின்றன என்பதை விஞ்ஞானிகள் அடையாளம் காண உதவியது. அறிவியல் ஆராய்ச்சிக்கான ஆதாரங்களை வழங்குவதைத் தவிர, ஆப்டிகல் இல்யூஷன்கள் நமது அன்றாட வாழ்விலிருந்து தற்காலிகமாக மன அழுத்தத்தை விடுவிக்க உதவுவதோடு நமது மூளைக்கு ஆரோக்கியமான பயிற்சியையும் வழங்குகின்றன. உங்களின் கவனிக்கும் திறன்களை பரிசோதனை செய்ய இது ஒரு சிறந்த வழி.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Bright Side தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் உள்ள காட்டில் ஒரு தந்திரக்கார நரி மறைந்திருக்கிறது. அந்த நரி எங்கே மரைந்திருக்கிறது என 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. சாதாரணமானவர்களால் நரியைக் கண்டுபிடிக்கவே முடியாது. ஆனால், ஜீனியஸ்களால் மட்டுமே நரியைக் கண்டுபிடிக்க முடியும். நரியைக் கண்டுபிடித்து நீங்கள் ஜீனியஸ் என்பதை நிரூபியுங்கள்.
காட்டில் வாழும் வேட்டை விலங்கான நரி கதைகளிகலும் புராணங்களிலும் எப்போதும் தந்திரமான விலங்காகவே சித்தரிக்கப்பட்டு வந்துள்ளது. நரி என்றாலே தந்திரம், ஏமாற்றும் விலங்கு என்றே கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் மறைந்திருக்கும் தந்திரக்கார நரியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் நரி இல்லை என்று அடித்து சத்தியம் செய்கிறார்கள். ஆனால், ஜீனியஸ்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள்.
சிலர் நரி எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் நரி எங்கே மறைந்திருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். மரத்தடியில் கவனமாகப் பாருங்கள். நரி கண்ணில் படலாம்.
இப்போது நீங்கள் நரியைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஜீனியஸ்தான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு நரி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.