Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு முடிவில்லாத சுவாரசியத்தை அனுபவமாக்கிக் கொண்டிருக்கிறது. ஆப்டிகல் இல்யூஷன் என்பது நெட்டிசன்கள் மத்தியில் மாயாஜாலத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அப்படி என்ன மாயாஜாலாம், சுவாரசியம் என்று கேட்கிறீர்களா? இந்த ஆப்டிகல் இல்யூஷன் பட சவாலை எதிர்கொண்டு அதை தெரிந்துகொள்ளுங்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், ஏரிப் பகுதியில் ஃபிளமிங்கோ பறவைகளுக்கு இடையே மறைந்திருந்து உங்கள் கண்களை ஏமாற்றும் நீர் யானையை 11 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் ஜீனியஸ். ஏனென்றால், குறுகிய நேரத்தில் கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு ஒளியியல் மாயை விளையாட்டு. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மேஜிக். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்று கண்கட்டி வித்தை. நீங்கள் முழித்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் மூளையைக் குழப்பி விழி பிதுங்க வைக்கும் பெருங் குழப்பம். ஆனால், நீங்கள் கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால், இது ஒரு சுவாரசியமான இணையப் புதிர் விளையாட்டு.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Mister Teach (YouTube) சேனலில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு ஏரிப் பகுதியில் ஃபிளமிங்கோ பறவைகளுக்கு இடையே ஒரு நீர் யானை மறைந்திருக்கிறது. அந்த நீர் யானை எங்கே இருக்கிறது என்று 11 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. உங்கள் கண்களை ஏமாற்றும் அந்த நீர் யானையை கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஜீனியஸ். ஏனென்றால், மிகக் குறுகிய நேரத்தில் நீர் யானையைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.
நீர் யானையைக் கண்டுபிடிப்பதற்கு முன் நீர் யானையைப் பற்றி சில தகவல்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.
1) நீர் யானை உலகத்தில் இரண்டாவது பெரிய நிலத்தில் வாழும் விலங்கு. நிலத்தில் வாழும் முதல் மிகப் பெரிய விலங்கு யானை. அதற்கு அடுத்து 2வது பெரிய விலங்கு நீர் யானை.
2) நீர் யானைகள் தாவர உண்ணிகள். அதன் உருவத்தைக் கண்டு பயப்படத் தேவையில்லை.
3) நீர்யானை இரவில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். நீர்யானையும் ஆந்தை போல இரவில் விழித்திருக்கும். நீர்யானைகள் இரவில் உணவைத் தேடி அலைகின்றன.
4) நீர்யானைகள் கூட்டமாக வாழ விரும்புகின்றன. ஒரு நீர்யானை மந்தை பொதுவாக 20 நீர்யானைகளைக் கொண்டிருக்கும். அவை ஒரு பெரிய ஆண் நீர்யானையால் வழிநடத்தப்படுகின்றன.
6) நீர்யானைகள் பொதுவாக இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஒரு கன்றை பிரசவிக்கும்.
7) ஒரு காட்டு நீர்யானை 40 ஆண்டுகள் வரை வாழக்கூடியது.
8) நீர்யானைகள் தண்ணீரில் நன்றாக நீந்தக் கூடியவை. நீர்யானைகள் தண்ணீருக்குள் 5 நிமிடங்கள் வரை மூச்சை அடக்கி மூழ்கி இருக்கும் திறன் கொண்டவை.
9) நீர்யானைகள் வாழ்நாள் முழுவதும் ஏரிகள் மற்றும் ஆறுகளில் கழிக்கின்றன.
10) நீர்யானையின் கண்கள், மூக்கு மற்றும் காதுகள் தலையில் உள்ளன.
11) நீர்யானைகள் நீரில் இருந்து நிலத்திலும் வெளியே வந்து இருக்கும். ஒரு நீர்யானை ஒரு பெரிய உடல், அழகான சிறிய வால் மற்றும் குறுகிய கால்களைக் கொண்டது.
12) மனிதர்கள் வேட்டையாடுதல் காரணமாக நீர்யானைகளின் எண்ணிக்கை பல ஆண்டுகளாக வெகுவாகக் குறைந்துள்ளது. இன்று, பெரும்பாலான நீர்யானைகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே காணப்படுகின்றன.
நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் மறைந்திருக்கும் நீர்யானையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள நீர்யானையை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். நீர்யானை எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் கீழ் பகுதியில் கவனமாகப் பாருங்கள். நீர்யானையை பட்டென பிடித்துவிடலாம்.
இப்போது படத்தில் மறைந்திருக்கும் நீர்யானையை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, நீர்யானை எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.