/tamil-ie/media/media_files/uploads/2023/08/snake-counts-1.jpg)
optical illusion challenge Image credit: Uttarakhand Forest Research Institute
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது ஒரு தந்திரம்; ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு இணையப் புதிர் விளையாட்டு. ஆனால், அது உங்களை ரிலாக்ஸ் செய்ய வைக்கும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒருவர் ஒரு படத்தை எப்படி பார்த்து உணர்கிறார். எந்த கோணத்தில் பார்க்க பழக்கப்பட்டிருக்கிறார் என்பதை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படுகிறது.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/snake-counts-1-1.jpg)
இந்த படத்துல எத்தனை பாம்புகள் இருக்கிறது என 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்ற சவால் விடப்படுகிறது. பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், நீங்கள் எத்தனை பாம்பு இருக்கிறது என்று சரியாக கன்டுபிடித்தால் ஜீனியஸ்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற புதிர்களாகவும் இருக்கிறது. அதே நேரத்தில் சில ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஐக்யூ டெஸ்ட் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. சில ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உளவியல் ரீதியாக ஆளுமையையும் குறிப்பிடுகிறார்.
உத்தரக்காண்ட் காடுகள் ஆராய்ச்சி நிறுவனம் (Uttarakhand Forest Research Institute) தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை ஆப்டிகல் இல்யூஷன் புதிர் பொழுதுபோக்கு விளையாட்டுக்காக லாபநோக்கமில்லாமல் பயன்படுத்துகிறோம்.
Amazing video of group of #Indian_cobra; most widely spread venomous #snake of #India, it derives its name from shape of spectacle on back of its hood; Indian cobra distinguished by relatively large size of #hood
— Uttarakhand Forest Research Institute (@ukfrihaldwani) August 30, 2022
Save #wildlifepic.twitter.com/m63UC9vkNY
இந்த வீடியோவில், ஒரு பொட்டல் காட்டில் முள்செடியில் சில பாம்புகள் ஒன்றாகப் பிண்ணிப் பிணைந்து படமெடுத்து ஆடுகின்றன. இந்த வீடியோவில் எத்தனை பாம்புகள் இருக்கிறது என்று 10 நொடிகளில் கண்டுபிடித்து சரியான விடையைக் கூற முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. இந்த வீடியோவை எத்தனை முறை பார்த்தாலும், உண்மையில் எத்தனை பாம்புகள் இருக்கிறது என்று கன்டுபிடிக்க முடியாமல் பலரும் குழம்பிப் போகிறார்கள்.
சிலர் இந்த படத்தில் 4 பாம்புகள் இருக்கிறது என்று கூறுகிறார்கள். சிலர் பார்க்கவே பயமாக இருக்கிறது என்று கூறி கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்கிறார்கள். ஆனால், நீங்கள் தைரியமாக இந்த வீடியோவில் எத்தனை பாம்பு இருக்கிறது என்று கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் ஜீனியஸ்தான்.
இந்த வீடியோவில் நீங்கள் கண்டுபிடித்த பாம்புகளின் எண்ணிக்கை சரியானதா என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா? இந்த வீடியோவில் 5 பாம்புகள் இருக்கிறது நன்றாகப் பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.