Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் நெட்டிசன்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வைரலாகி வருகிறது. முதலில் ஒரு சாதாரண புதிர், தேடினால் த்ரில்லிங், திணறி நிற்கும்போது குழப்பம், விடை கண்டுபிடிக்கும்போது உற்சாகம், ஆச்சரியம் என ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கலவையான அனுபவங்களை அளிக்கிறது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் செடியில் மறைந்திருக்கும் பச்சோந்தியை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. ஜீனியஸ்களால் மட்டுமே மறைந்திருக்கும் பச்சோந்தியைக் கண்டுபிடிக்க முடியும். ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் ஜீனியஸ் என்று நிரூபிப்பதற்கான நேரம் இது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பல வகைகளாக உள்ளன. முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து ஆளுமையை கூறுவது. சில ஆப்டிகல் இல்யுஷன் படங்கள் ஐ.க்யூ டெஸ்ட்களாக பயன்படுத்தப்படுகின்றன. சில ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிக்க முடியுமா என்று பொழுதுபோக்கு சவால் விளையாட்டுகளாக இருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், மூளைக்கு வேலை கொடுக்கும் பிரைன் டீசர்கள், புதிர்கள் என்று பல வகைகளாக ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உள்ளன.
ஆப்டிகல் இல்யூஷன் சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, யானையைக் கண்டுபிடிக்க முடியுமா என்று வெளியாகும் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மிகவும் சுவாரசியமானவை. அதிலும் குறிப்பாக, மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடிக்க முடியுமா என்ற ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்றால், நெட்டிசன்கள் உற்சாகம் அடைந்து பாம்பு எங்கே இருக்கிறது என்று தேடத் தொடங்கிவிடுகிறார்கள். பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், நெட்டிசன்கள் பாம்பு, பச்சோந்தி படங்களைத்தான் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள்.
அந்த வகையில், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் செடியில் மறைந்திருக்கும் பச்சோந்தியை 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. ஜீனியஸ்களால் மட்டுமே மறைந்திருக்கும் பச்சோந்தியைக் கண்டுபிடிக்க முடியும். ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் ஜீனியஸ் என்று நிரூபிப்பதற்கான நேரம் இது. முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் உள்ள மறைந்திருக்கும் பச்சோந்தியைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நிஜமாவே நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் உள்ள பச்சோந்தியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பச்சோந்தி எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். பச்சோந்தியைப் பட்டென கண்டுபிடித்துவிடலாம்.
இப்போது படத்தில் மறைந்திருக்கும் பச்சோந்தி எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். சிலர் பச்சோந்தி இல்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, பச்சோந்தி எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.