Advertisment

ஜீனியஸ்களால் மட்டுமே சாத்தியம்; ஆடு மேய்ப்பவரின் நாய் எங்கே இருக்கு? 10 நொடியில் கண்டுபிடிங்க!

Optical illusion: இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆடு மேய்ப்பவரின் நாய் எங்கே மறைந்திருக்கிறது என 10 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்; கண்டுபிடிச்சா நீங்கதான் ஜீனியஸ்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Optical Illusion, Optical Illusion Pictures, Optical Illusion Viral Picture, Optical Illusion Animal Picture, ஆப்டிகல் இல்யூஷன், ஆப்டிகல் இல்யூஷன் படம், Optical Illusion Viral Photos, Optical Illusion Latest, about optical illusion,Optical Illusion photos, Optical Illusion pictures, Optical Illusion images

Optical illusion challenge Image: Pinterest

Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சூறாவளியைப் போல தாக்கி வருகிறது. அதன் சுவாரசியத்தில் மயங்கிப்போன நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்களை வெறித்தனமாகத் தேடித் தீர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

Advertisment
publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆடு மேய்ப்பவரின் நாய் எங்கே மறைந்திருக்கிறது என 10 வினாடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்கதான் ஜீனியஸ்.

ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் பல நூற்றாண்டுகளாக மனித மனதைக் கவர்ந்து குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கண்களை ஏமாற்றி தந்திரமாக விளையாடும் மனதைக் கவரும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சவால் விடுக்கும் புதிர்கள் உங்கள் கற்பனையின் எல்லைகளை விரிவுபடுத்தும். ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள் உங்கள் கண்காணிப்பு திறன்களை அதிகரிக்கவும், விவரங்களுக்கு உங்கள் கவனத்தை மேம்படுத்தவும் ஒரு சிறந்த வழியாகும்.

publive-image

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Pinterest தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு ஆடு மேய்ப்பவர் தனது ஆட்டு மந்தையுடன் மலைகளில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கிறார். செம்மறி ஆடுகள் மெதுவாக புல்களை மேய்ந்துகொண்டிருக்கின்றன. அதேசமயம், ஆடு மேய்ப்பவர் ஆட்டு மந்தைகளை கண்காணித்துக் கொண்டிருக்கிறது. இந்த மலையில் ஆடு மேய்ப்பவரும் ஆடுகளும் மட்டும் இல்லை, இந்த படத்தில் ஆடு மேய்ப்பவரின் ஒரு நாய் மறைந்திருக்கிறது. அதனால், ஆடு மேய்ப்பவரின் நாய் எங்கே இருக்கிறது என 10 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா, ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் ஜீனியஸ். தலைகீழாக நின்றாலும் கண்டுபிடிக்க முடியாது. ஆனால், நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணுங்க. ஆடு மேய்ப்பவரின் நாயக் கண்டுபிடித்து ஜீனியஸ் என்று நிரூபியுங்கள்.

நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் ஆடு மேய்ப்பவரின் நாயைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நீங்கள் நிஜமாகவே ஜீனியஸ்தான்.

ஒருவேளை உங்களால் இந்த படத்தில் ஆடு மேய்ப்பவரின் நாயைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். நாய் எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். தலைகீழாக நின்றாலும் கண்டுபிடிக்க முடியாது என்று கூறினோம் இல்லையா, ஆனால், நீங்கள் தலைகீழாக நிற்கத் தேவையில்லை. படத்தை தலைகிழாகத் திருப்பிப் பாருங்கள். நாயைக் கண்டுபிடித்துவிடலாம்.

இப்போது இந்த படத்தில் ஆடு மேய்ப்பவரின் நாயை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இன்னும் உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம் நாய் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம். ஆடு மேய்ப்பவரின் ஆடையில் நாயின் தோற்றத்தைப் பாருங்கள்.

publive-image

ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு மட்டுமல்ல ஒரு காட்சியைப் பார்க்கும்போது முழுவிவரத்துடன் பார்க்க உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிறது. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”

Viral Photo
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment