Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படம் விடுக்கும் சவால் என்பது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் புதிர் விளையாட்டுகளுக்கு மயங்காதவர்களே இல்லை என்கிற அளவுக்கு எல்லாத் தரப்பு நெட்டிசன்களும் வெறித்தனமாக ஆப்டிகல் இல்யூஷன் சவாலைத் தீர்த்து வருகிறார்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மலையில் கம்பீரமாக நிற்கும் சிங்கத்தை 4 நொடிகளில் கண்டுபிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. சரியாக கண்டுபிடித்து கூறினால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் ஜீனியஸ். ஏனென்றால், இது அந்த அளவுக்கு கடினமானது.
“மாயா மாயா மாயா எல்லாம் மாயா
சாயா சாயா சாயா எல்லாம் சாயா” என்ற பாடல் ஆப்டிகல் இல்யூஷன் படத்துக்கு பொருந்தும். ஆனால், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மாயமில்லை, மந்திரமில்லை. நாம் முதல்முறை பார்க்கும்போது அவ்வளவு கூர்மையாக பார்ப்பதில்லை. பலரும் மேலோட்டமாகத்தான் பார்க்கிறோம். ஆனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கூர்மையான பார்வையைக் கோருகின்றன.
“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது” என்ற கவிஞர் மருதகாசியின் பாடல் வரிகள் ஆப்டிகல் இல்யூஷன் சவாலுக்கு எந்த அளவுக்கு பொருந்திப் போகிறது என்பதை இந்த சவாலை ஏற்று புலைகலைத் தேடும் உங்களுக்கு நல்ல அனுபவமாகும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இருப்பது நதி உருவாகும் மலைப்பகுதி. இந்த மலையில் கம்பீரமாக நிற்கும் சிங்கத்தை 4 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஜீனியஸ். ஏனென்றால், அந்த அளவுக்கு கடினமானது.
நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் மறைந்திருக்கும் சிங்கத்தைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாகவே உங்களுக்கு மிகவும் கூர்மையான பார்வைத்திறன் உள்ளது. ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
சிலர் இந்த படத்தில் சிங்கம் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்று கூறுகிறார்கள். உண்மையில் இந்த படத்தில் சிங்கம் எங்கே இருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா?
இப்போது படத்தில் மறைந்திருக்கும் சிங்கம் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.