Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விதவிதமாக இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சுவாரசியத்தில் மூழ்கிப்போகும் நெட்டிசன்கள் வெறித்தனமாக விடைதேடி வருகிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஆலம் விழுதுகளில் தொங்கும் பாம்பு எங்கே இருக்கிறது என 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்கக் கூடிய கடினமான சவால் இது. ட்ரை பண்ணி பாருங்கள்.
“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது” கவிஞர் மருதகாசி எழுதிய தத்துவப் பாடல் வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு பொருந்துகிறதோ அதே அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் படத்துக்கும் பொருந்தும். அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம் என்கிறோம். இந்த தோற்ற மயக்கத்தில் குழப்பமடையாமல் இந்த சவாலை எதிர்கொள்ளுங்கள். நீங்கள் அதிபுத்திசாலி என காட்டுங்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் விழுதுகள் எவை, மரம் எது என்று தெரியாத அளவுக்கு படர்ந்திருக்கும் ஒரு மிகப் பெரிய ஆலமரம் இருக்கிறது. இந்த ஆலமரத்தின் விழுதுகளில் தொங்கும் கொடிய விஷப் பாம்பை 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிசா, ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் நிஜமாவே ஜீனியஸ்தான். ஏனென்றால், இந்தப் படம் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றிவிடும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடை தேடுவது என்பது கண்ணாடிகளுக்கு இடையே வைரத்தை தேடுவதைப் போன்றது. நவீன வாழ்க்கையின் வேலை நெருக்கடியில் சிக்கித் திணறும்போது இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் தான் பொழுதுபோக்கான புதிர்களைப் போட்டு சற்று இளைப்பாறுதலை அளிக்கிறது. அதனால்தான், நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்களால் காந்தம்போல ஈர்க்கப்படுகிறார்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆலமரத்தின் விழுதுகளில் பாம்பு எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் நிஜமாகவே ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள். கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். வலப் பக்கம் ஆலம் விழுதுகளை கவனமாகப் பாருங்கள். பாம்பு கண்ணில் படலாம்.
இப்போது நீங்கள் பாம்பை எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் அதிபுத்திசாலிதான். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.