Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் நெட்டிசன்கள் மத்தியிலும் ஒரு பெரிய மாயாஜாலத்தை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. சுவாரசியத்துக்கும் பொழுதுபோக்குக்கும் யோசிப்பதற்கும் பஞ்சமே இல்லாத விளையாட்டு இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிர்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களில், முதல் பார்வையில், சற்றுமுன் வரை நமக்கு தெரியாத இந்த விலங்குகள், உற்று கவனிக்கும்போது மட்டும் எப்படி இந்த படத்தில் தெரிகிறது என்று நெட்டிசன்கள் பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் பனி சூழ்ந்த ஒரு மலைப் பகுதியில், ஒரு பனிச் சிறுத்தை கம்பீரமாக உலவும் பனிச் சிறுத்தை எங்கே இருக்கிறது என்று 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் ஜீனியஸ். இது போன்ற உங்கள் கண்களை ஏமாற்றும் கடினமான புதிர்களை ஜீனியஸ்களால் மட்டுமே தீர்க்க முடியும்.
ஆப்டிகல் இல்யூஷன் ஏதோ ஒரு புதுமையான புதிர் அல்ல. நேற்றோ இன்றோ உருவானது அல்ல. கி.மு 3,500 ஆண்டுகளுக்கு முன்னரே பண்டைய கிரேக்கத்தில் ஆப்டிகல் இல்யூஷன் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாக தொல்லியல் துறையினர் கூறுகிறார்கள். கி.மு. 4ம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க தத்துவவாதி அரிஸ்டாடில் ஆப்டிகல் இல்யூஷன் பற்றி குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் உள்ள பழமையான பல சிற்பங்கள் ஆப்டிகல் இல்யூஷன் கோணத்தில் அமைந்தவைதான்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. ஒரு பனிப் பிரதேசத்தில், உள்ள பனி மலையில் பனிச் சிறுத்தை ஒன்று கம்பீரமாக உலவுகிறது. ஆனால், அந்த பனிச் சிறுத்தை மேலோட்டமாகப் பார்த்தால் தெரியாது. உங்கள் கூர்மையான பார்வையால் அலசினால்தான் பனிச் சிறுத்தை எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியும். இந்த படத்தில் பனி மலையில் கம்பீரமாக உலவும் பனிச் சிறுத்தையை 8 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் ஜீனியஸ். இது போன்ற உங்கள் கண்களை ஏமாற்றும் கடினமான புதிர்களை ஜீனியஸ்களால் மட்டுமே தீர்க்க முடியும்.
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் பனி மலையில் கம்பீரமாக உலவும் சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் ஆப்டிகல் இல்யூஷனில் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
நீங்கள் இன்னும் பனிச் சிறுத்தையைக் கண்டுபிடிக்கவில்லையா கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். படத்தில், மலைப் பகுதியில் பாறைகள் தெரியும் இடங்களில் கவனமாகப் பாருங்கள்.
இப்போது பனிச் சிறுத்தையை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. பனிச் சிறுத்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு மட்டுமல்ல அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் உள்ள ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.