Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளை அல்லது பறவைகளைக் கண்டுபிடிப்பது என்பது வைக்கோல் போரில் தொலைந்துபோன ஊசியைத் தேடுவதைப் போன்றது. இன்னும் சரியாக சொல்வதென்றால், இது ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு அவ்வளவுதான். ஆனால், இங்கே நீங்கள் கண்களைத் திறந்துகொண்டுதான் தேடப் போகிறீர்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புலி எங்கே மறைந்திருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. இது உங்கள் கண்களை ஏமாற்றும் சவால், என்பதால் ஜீனியஸ்களால் மட்டுமே புலியைக் கண்டுபிடிப்பது சாத்தியம். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டு நெட்டிசன்களால் மிகவும் சுவாரசியமானதாகப் பார்க்கப்படுகிறது. வேலை நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும்போது ரிலாக்ஸ் செய்ய ஆப்டிகல் இல்யூஷன் புதிர் விளையாட்டுகள் உதவுகிறது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் என்பது ஒரு மாயாஜாலம். ஒரு தந்திரம். அது நீங்கள் ஒரு படத்தை எந்த கோணத்தில் எப்படிப் பார்த்து உணர்கிறீர்கள் என்பதைப் பொறுத்து சவால்கள் உருவாக்கப்படுகிறது. உங்கள் கவனத்தை வேறு பக்கம் திருப்பும் விதமாக அமைக்கப்பட்டிருக்கும். உங்கள் மூளையைக் குழப்பி கண்ணாமூச்சி ஆடும். நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும். விலங்குகள் கூட, வேட்டையாடுவதற்கு இரையின் கண்களுக்கு தெரியாமல் மறைந்திருந்து தாக்குவதில் மிகவும் கில்லாடிகள். அந்த வகையில், இந்தியாவில் உள்ள வங்கப் புலிகளும் (Bengal Tigrers) அற்புதமாக மறைவாக பதுங்கியிருந்து வேட்டையாடக் கூடியவை. அதனுடைய, மறைந்திருக்கும் திறனுக்கு இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலே சாட்சி பாருங்கள்.
இந்த படம் Lincolnshire Wildlife Park என்ற முகநூல் பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த படத்தில் புலி எங்கே மறைந்திருக்கிறது என 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. இது உங்கள் கண்களை ஏமாற்றும் சவால், என்பதால் ஜீனியஸ்களால் மட்டுமே புலியைக் கண்டுபிடிப்பது சாத்தியம். முயற்சி செய்து பாருங்கள், முடியாதது எதுவுமில்லை.
புலியைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து நீங்கள் இப்போது குழம்பிப் போயிருப்பீர்கள், அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு தந்திரம், கண்கட்டி வித்தை என்று கூறுகிறோம்.
இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் புலி எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். 5 வினாடிகளில் புலியைக் கண்டுபிடித்துவிட்டிருந்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் ஜீனியஸ். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை, உங்களால் புலியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை நன்றாக ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள், புலியைக் கண்டுபிடித்துவிடலாம்.
இன்னும் உங்களால் இந்த படத்தில் மறைந்திருக்கும் புலியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், பரவாயில்லை. உங்களுக்காக புலி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.