New Update
/
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விதவிதமாக இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகி வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சுவாரசியத்தில் மூழ்கிப்போகும் நெட்டிசன்கள் வெறித்தனமாக விடைதேடி வருகிறார்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மண்ணில் மறைந்திருக்கிருக்கும் தேரையை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.
“கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும்
நீ காணும் தோற்றம், உண்மை இல்லாதது
அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்
அடையாளம் காட்டும், பொய்யே சொல்லாதது” கவிஞர் மருதகாசி எழுதிய தத்துவப் பாடல் வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு பொருந்துகிறதோ அதே அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் படத்துக்கும் பொருந்தும். அதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தோற்ற மயக்கம் என்கிறோம். இந்த தோற்ற மயக்கத்தில் குழப்பமடையாமல் இந்த சவாலை எதிர்கொள்ளுங்கள். நீங்கள் அதிபுத்திசாலி என காட்டுங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Reddit-ல் வெளியாகி உள்ளது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மண்ணில் மறைந்திருக்கிருக்கும் தேரையை 10 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். முயற்சி செய்து பாருங்கள் முடியாதது எதுவுமில்லை.
இந்த படத்தில் மண்ணில் மறைந்திருக்கும் தேரையைப் பற்றி சுருக்கமாகத் தெரிந்துகொள்வோம். தேரை என்பது தவளையில் ஒருவகை. இந்த தேரைகள் நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியவை, தேரை நீரிலும் நிலத்திலும் வாழ்வதற்கு ஏற்றாற்போல, குளிர்ந்த ரத்தம் கொண்ட உயிரினம். மண் தவக்களை என்று கேள்விப்பட்டிருக்கீறீர்களா? அந்த மண் தவளை வகை தேரையைத் தான் இந்த படத்தில் நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்.
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் தேரை எங்கே இருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் நிஜமாகவே ஜீனியஸ்தான். உங்கள் பார்வையில் இருந்து எதுவும் தப்ப முடியாது. உங்களுக்கு பாராட்டுகள்.
இந்த படத்தில் தேரை எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தை ஜூம் செய்து கவனமாகப் பாருங்கள். தேரை கண்ணில் படலாம்.
இப்போது நீங்கள் தேரையை மிக எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கும் பாராட்டுகள். இன்னும் கண்டுபிடிக்காதவர்களுக்கு தேரை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.