Optical illusion game: இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் மனதைக் கவரும், உங்கள் அறிவை விரிவுபடுத்தும் உங்கள் புலன்களை ஈடுபடுத்தும் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடும். நாளெல்லாம் கணினியில் வேலை செய்து இணையத்தில் சோர்ந்து போகும் உங்களுக்கு இது ஒரு சுவாரசியமான விளையாட்டு. நீங்கள் ட்ரை பண்ணி பாருங்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எருமைக் கூட்டத்தில் சிங்கிளாக புகுந்த சிங்கத்தை 8 நொடிகளுக்குள் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஜீனியஸ்.
ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் உங்கள் பார்வைத் திறனுக்கான சாவல் என்பதைவிட, நீங்கள் ஒரு காட்சியைக் கவனிக்கும் திறனுக்கான சவால் என்று கூறுவது சரியாக இருக்கும். கேமரா கண்கள் உள்ள மனிதர்களால் மட்டுமே மிகவும் உன்னிப்பாகவும் விரைவாகவும் ஒரு காட்சியில் உள்ள விவரங்களை முழுமையாகக் கூற முடியும். பெரும்பாலான மனிதர்கள் ஒரு காட்சியில் உள்ள எல்லா பொருள்கள், விவரங்களையும் அறிவதில்லை. அதனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவால், காட்சிகளைப் பார்க்கும்போது உங்கள் கவனிக்கும் திறனை மேலும் மேம்படுத்தும்.
இந்த ஆப்டிக இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் எருமை மாடுகள் கூட்டமாக இருக்கின்றன. இதைப் பார்த்த சிங்கம் ஒன்று வேட்டையான சிங்கிளாக புகுந்துவிட்டது. ஆனால், அந்த சிங்கம் எங்கே இருக்கிறது என தெரியவில்லை. அந்த சிங்கம் எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படிக் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் ஜீனியஸ் ஏனென்றால், இது மிகவும் சவாலானது. நீங்க ட்ரை பண்ணி பாருங்க.
நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் எருமைக் கோட்டத்தில் புகுந்த சிங்கத்தைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் இன்னும் இந்த படத்தில் சிங்கத்தை அடையாளம் காணமுடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். சிங்கம் எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். படத்தில் இடது பக்கம் கவனமாகப் பாருங்கள். சிங்கம் கண்ணில் படலாம்.
இப்போது படத்தில் எருமைக் கூட்டத்தில் சிங்கிளாகப் புகுந்த சிங்கத்தை எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆனாலும், சிலரால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, சிங்கம் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.