/tamil-ie/media/media_files/uploads/2023/07/wolf-python-1.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் புதிர்
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தைக் கலக்கிவரும் மிகவும் சுவாரஸ்யமான ஒரு பொழுதுபோக்கு புதிர் விளையாட்டு. பல சமூக ஊடகப் பயனர்கள், நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்களின் சுவாரஸ்த்தில் மயங்கிப்போய் வெறித்தனமாக விடை தேடி வருகிறார்கள். அது மட்டுமில்லாமல், சமூக ஊடக பயனர்கள், சுவாரசியமான ஆப்டிகல் இல்யூஷன் படங்களை தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொண்டு அவர்களிடம் விடை கேட்கிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் மிகவும் சுவாரசியமாக இருப்பதற்கு காரணம், குறைந்த நேரத்தில் பதிலைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/wolf-python-1-1.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும். சற்று நேரத்தில் உங்கள் மூளையைக் குழப்பும், விடையை மறைத்து உங்கள் தலைமுடியை பிச்சிக்கொள்ளச் செய்யும். முடிவில் விடை தெரியும்போது உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/wolf-python-1-2.jpg)
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் மந்தையில் இருந்து வழி தப்பிய ஒரு ஆட்டுக் குட்டி தனியாக நிற்கிறது. காட்டில் தனியாக நிற்கும் ஆட்டுக் குட்டியை ஒரு ஓநாயும் ஒரு மலைப் பாம்பும் குறி வைக்கிறது. அந்த ஓநாயும் மலைப் பாம்பும் எங்கே இருக்கிறது என 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா, நீங்க ஜீனியஸ்தான். ஏனென்றால், ஜீனியஸ்களால் மட்டுமே கண்டுபிடிக்க கூடிய கடினமான சவால் இது. நீங்கள் ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் ஆட்டுக் குட்டியைக் குறி வைக்கும் ஒநாயையும் மலைப் பாம்பையும் 10 நொடிகளில் கண்டுபிடிது விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் நிஜமாவே ஜீனியஸ்தான்.
பலரும் தங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்று தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளனர்.
சிலர் ஆட்டுக் குட்டியையும் ஓநாயையும் கண்டுபிடித்துவிட்டேன் ஆனால் மலைப் பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். சிலர், ஆட்டுக் குட்டியையும் மலைப் பாம்பையும் கண்டுபிடித்துவிட்டேன் ஆனால் ஓநாய் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/wolf-python-2.jpg)
உங்களுக்காக ஆடுக் குட்டியை குறி வைக்கும் ஓநாய், மலைப் பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம். தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சி அளியுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.