Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் விதவிதமாக வித்தியாசமாக சுவாரசியமாக வெளியாகி வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் தீரா தாகத்துடன் ஆப்டிகல் இல்யூஷன் படங்களைத் தேடித் தீர்த்து வருகிறார்கள்.
இன்றைய ஆப்டிகலில்யூஷன் படத்தில் உள்ள தலைவர்கள் மரத்தில், எத்தனை தலைவர்கள் இருக்கிறார்கள் என்று 20 நொடியில் தலைவர்களை அடையாளம் காண முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க ஜீனியஸ்!
இந்த படம் Painting Valley என்ற தளத்தில் வெளியாகி உள்ளது. சிலர் இந்த கோட்டோவியத்தை 1880-ம் ஆண்டிற்கு முன்பு வரையப்பட்டது என்றும் ஹார்பர்ஸ் இல்லஸ்ட்ரேட்டட் படத்திற்காக உருவாக்கப்பட்டது என்றும் கூறுகின்றனர். ஆனால், இந்த படத்தைப் பற்றிய வரலாறு என்பது மர்மமாகவே உள்ளது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் உள்ள தலைவர்கள் மரத்தில் எத்தனை தலைவர்களின் முகம் மறைந்திருக்கிறது. நீங்கள் எத்தனை தலைவர்கள், யார் யார் இருக்கிறார்கள் என்பதை 20 நொடியில் அடையாளம் காண முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி அனைத்து தலைவர்களின் முகங்களையும் அடையாளம் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் நீங்கள்தான் ஜீனியஸ். ஏனென்றால், இது மிகவும் கடினமான சவால். தேசியத் தலைவர்கள் மரத்தில் தலைவர்களின் முகங்களை கண்டுபிடிக்கத் தொடங்குங்கள்.
சிலர் இந்த மரத்தில் 6 தலைவர்களின் முகங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் சிலர் 7-8 தலைவர்கள் முகங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் கூறுகிறார்கள். ஜீனியஸ்கள் படத்தில் உள்ள தலைவர்கள் மரத்தில் உள்ள 10 தலைவர்களின் முகங்களையும் அடையாளம் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறுகிறார்கள். நீங்கள் 10 தலைவர்களின் முகங்களை கண்டுபிடித்திருந்தால் நீங்கள் நிஜமாகவே ஜீனியஸ். உங்களுக்கு பாராட்டுகள்.
இந்த படத்தில் அனைத்து தலைவர்களின் முகங்களையும் அடையாளம் காண முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்காக தலைவர்களின் முகங்களை வட்டமிட்டுக் காட்டி அவர்களின் பெயர்களையும் குறிப்பிடுகிறோம் பாருங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் தேசியத் தலைவர்கள் மரம் (National leaders trees) என்று அழைக்கப்படும் இந்த படத்தில் மொத்தம் 10 தலைவர்கள் இருக்கிறார்கள்.
- ராஜீவ் காந்தி
- இந்திரா காந்தி
- டாக்டர். ராதாகிருஷ்ணன்
- சந்திரசேகர் ஆசாத்
- சுபாஷ் சந்திர போஸ்
- ரவீந்திரநாத் தாகூர்
- மகாத்மா காந்தி (மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி)
- கோபால் கிரிஷன் கோகலே
- ஜவஹர்லால் நேரு
- லால் பகதூர் சாஸ்திரி
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.