ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற சுவாரஸ்யமான பொழுதுபோக்கு புதிராக நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதன் அடிப்படையில், ஒருவரின் ஆளுமையையும் வெளிப்படுத்துவதால் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் உற்று கவனித்தால் வேறு மாதிரியாகவும் தோற்றம் அளித்து பார்ப்பவரின் மனதை மருளச் செய்யும் மாயா ஜாலம் நிகழ்த்துபவை.

கடற்கரையில் ஒரு கொரில்லா நடந்து செல்கிற இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் நெட்டிசன்களை முட்டாளாக்கி வருகிறது.
இம்குரில் (Imgur) வெளியிடப்பட்ட இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தை, எல்லோரும் முதலில் பார்த்ததும் இதில் என்ன இருக்கிறது, ஒரு கொரில்லா கடற்கரையில் நடந்து செல்கிறது அவ்வளவுதானே என்று நினைக்கிறார்கள். நீங்களும் ஒரு கொரில்லா கடற்கரையில் நடந்து செல்கிறது என்று நினைத்தால் இந்த படம் உங்களையும் ஏமாற்றிவிட்டது என்றுதான் அர்த்தம்.
இந்த படம் முதல் பார்வையில் ஒரு கொரில்லா போல தெரியும், ஆனால், சற்று உற்று பாருங்கள்.. அது கொரில்லா இல்லை என்பதை அறிந்து ஆசரியப்படுவீர்கள். கீழே உள்ள தொப்பியை நீங்கள் கண்டவுடன், அது உண்மையில் பழுப்பு நிற தொப்பியை அணிந்த ஒரு மீனவர் தனது மீனை எடுப்பதற்காக கீழே குனிந்து கொண்டிருக்கும் படம் என்பது தெரியும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் முதல் பார்வையில் உங்களை மட்டுமல்ல எல்லோரையும்தான் ஏமாற்றி இருக்கிறது. அதனால், கவலைப்படாதீர்கள். ஆனால், இந்த படம் காட்டிய மாயா ஜாலத்தை ரசியுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“