/tamil-ie/media/media_files/uploads/2023/07/Snake-in-grass-1.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் புதிர் photo: Ohio Department of Natural Resources
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை எதிர்பார்த்து நெட்டிசன்கள் அகோரப் பசியுடன் இருக்கிறார்கள். மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என எவ்வளவுதான் கணக்கில்லாமல் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை அளித்தாலும் யானைப் பசிக்கு அளித்த சோளப்பொரியாக போதாமல்தான் இருக்கிறது. அந்த அளவுக்கு வெறித்தனமாக ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்க்கிறார்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Snake-in-grass-2.jpg)
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் புற்கள் மற்றும் சருகுகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை
6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைத் திறனுக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி, கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்கள் ‘கிரேட்’தான்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. அது மாயாஜாலமும் இல்லை. ஆனால், அது ஒரு தந்திரம், அது உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை, அது உங்கள் மூளையைக் குழப்பி முழியைப் பிதுக்கும் புதிர். ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாக சுறுசுறுப்பாகத் தேடினால். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் ஜாம்பவான்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Snake-in-grass-3.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Ohio Department of Natural Resources தளத்தில் வெளியாகி முகநூலில் பகிரப்பட்டுள்ளது. இந்த படத்தில் புற்கள் மற்றும் சருகுகள் நிறைந்து காணப்படுகிறது. இந்த புற்கள் மற்றும் சருகுகளுக்கு இடையே ஒரு கொடிய விஷப் பாம்பு மறைந்திருக்கிறது. அந்த பாம்பு எங்கே இருக்கிறது என 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் கவனிக்கும் திறனுக்கும் சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நிஜமாகவே நீங்கள் ‘கிரேட்’தான்.
இந்த புதிய ஆப்டிகல் இல்யூஷன் சவால் ஒவ்வொரு நாளும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் காந்தம் போல ஈர்க்கின்றன. ஆப்டிகல் இல்யூஷன் சவாலை விளையாடுவதற்கான ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
இந்த படத்தில் புற்கள் மற்றும் சருகுகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை நீங்கள் இந்நேரம், கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் நிஜமாவே சவால்களைத் தீர்ப்பதில் நிஜமாகவே நீங்கள் ‘கிரேட்’தான். உங்களுக்கு பாராட்டுகள்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Snake-in-grass-3-2.jpg)
ஒருவேளை நீங்கள் இன்னும் புற்கள் மற்றும் சருகுகள் இடையே மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடிக்கவில்லை என்றால், உங்களுக்கு உதவி செய்ய பாம்பு எங்கே இருக்கிறது என்று ஒரு குறிப்பு தருகிறோம். படத்தின் இடது பக்கம் ஓரத்தில் கவனமாகப் பாருங்கள். பாம்பு கண்ணில் படலாம்.
இப்போது எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். சிலர் இன்னும் மறைந்திருக்கும் பாம்பை கண்டுபிடிக்கவில்லை என்றால், பாம்பு எங்கே இருக்கிறது என வட்டமிட்டு காட்டுகிறோம்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Snake-in-grass-3-1.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.