Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் மழைத் தொடங்கி விட்டது. இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் ஆப்டிகல் இல்யூஷன் சவால்கள் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அதில் நனைய விரும்புகிறீர்களா? இந்த சவாலை ஏற்கத் தயாராக இருங்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மழை வெள்ளத்தில் மறைந்திருக்கும் பாம்புகளை 6 நொடிகளில் கழுகுப் பார்வை உள்ளவர்களால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் கூர்மையான கழுகுப் பார்வை உடையவர் என நிரூபிப்பதற்கான நேரம் இது. ட்ரை பண்ணி பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் சவாலுக்கு பொருத்தமான பிரபலமான வரிகள் சொல்ல வேண்டும் என்றால், அது “கண்ணால் காண்பது பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்” என்பதுதான் பொருத்தமாக இருக்கும். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படமும் அதையே வழிமொழிகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஆப்டிகல் இல்யூஷன் சவாலுக்காக பயன்படுத்தி இருக்கிறோம். இந்த படத்தில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மழையில் நனையாமல் இருக்க ஆண்கள், பெண்கள் குடைபிடித்துகொண்டு பாதுகாப்பாக நடந்து செல்கிறார்கள், வெள்ளத்தை வேடிக்கை பார்க்கிறார்கள்.
மழை வெள்ளம் என்றாலே வெள்ளத்தில் சில நேரங்களில் பாம்புகளும் மிதந்து வரும். அப்போது நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அந்த வகையில் இந்த படத்தில் உள்ள வெள்ளத்திலும் 2 பாம்புகள் மிதந்து செல்கின்றன. அந்த பாம்புகள் எங்கே இருக்கிறது என கண்டுபிடிக்க முடியுமா என 6 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. உண்மையில் 2 பாம்புகளையும் மாஸ்டர்களால் மட்டுமே நிரூபிக்க முடியும். ஆப்டிகல் இல்யூஷனில் உங்களுக்கு கூர்மையான கழுகுப் பார்வை என்று நிரூபிப்பதற்கான நேரம் இது. பாம்புகளைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
ஆப்டிகல் இல்யூஷன் மனிதர்களின் பொதுவான பார்வைக் கோணத்தை அடிப்படையாக வைத்து புதிர்கள் வடிவமைக்கப்படுகின்றன. மனிதர்கள் பொதுவாக ஒரு காட்சியை எப்படிப் பார்த்து உணர்ந்து புரிந்துகொள்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்துதான் இந்த புதிர்கள் கேட்கப்படுகின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் சவால்களை எதிர்கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்று. ஆப்டிகல் இல்யூஷன் உங்கள் கண்களை ஏமாற்றும் தோற்ற மயக்கம், குழப்பும் காட்சிப் பிழை, உங்களை ஆச்சரியப்படுத்தும் சவால்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மழை வெள்ளத்தில் மிதந்து செல்லும் பாம்புகளை கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் உங்களுக்கு நிஜமாவே கழுகுப்பார்வைதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், பலரும் இந்த படத்தில் பாம்புகளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்கிறார்கள். சிலர் பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தில் பாம்பு எங்கே பதுங்கியிருக்கிறது என்று கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் வெள்ளை பாம்புகள் இல்யூஷன் செய்யப்பட்டிருக்கின்றன. கவனமாகப் பாருங்கள். பாம்பைக் கண்டுபிடித்துவிடலாம்.
இந்நேரம் நீங்கள் பாம்பைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நிஜமாவே உங்களுக்கு கழுகுப் பார்வைதான். ஆனால், பாம்புகளைக் கண்டுபிடிக்காதவர்களுக்கு பாம்புகள் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.