Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். ஏனெனில், நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத இடத்தில் மறைத்து வைக்கபட்டிருக்கும். நீங்கள் ஒரு காட்சியைப் பார்த்து புரிந்துகொள்ளும் திறனுக்கு சவால் விடும் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கவனிக்கும் திறனுக்கு சவால் விடும்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் புதரில் பதுங்கியிருக்கும் சிறுத்தையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா உங்களுக்கு கூர்மையான கழுகுப் பார்வை. முயற்சி செய்து பாருங்கள், முயன்றால் முடியாதது எதுவுமில்லை.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நமது கவனத்தையும் ஒரு குறிப்பிட்ட பொருளின் மீது கவனம் செலுத்தும் திறனையும் சோதிக்கின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முன்வைக்கப்படும் போது, நமது மூளை படத்தைப் புரிந்துகொள்ள கடினமாக யோசிக்க வேண்டும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சவாலானதாக இருக்கலாம். ஆனால், அவை மிகவும் வேடிக்கையாகவும் இருக்கும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Getty தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படம் ஒரு காட்டுப் பகுதியில் காய்ந்த மரங்கள் நிறைந்த புதர் பகுதியில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் காய்ந்த சிறு மரங்கள் நிறைந்த புதரில் ஒரு சிறுத்தை பதுங்கி இருக்கிறது. அந்த சிறுத்தை வெறுமனே மேலோட்டமாகப் பார்த்தால் தெரியாது. கழுகு போல கூர்மையாகப் பார்ப்பவர்களுக்கு மட்டுமே தெரியும். அதனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் புதரில் பதுங்கியிருக்கும் சிறுத்தையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா உங்களுக்கு கூர்மையான கழுகுப் பார்வை. சிறுத்தையைக் கண்டுபிடிக்க முயற்சி செய்து பாருங்கள், முயன்றால் முடியாதது எதுவுமில்லை
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் புதரில் பதுங்கியிருக்கும் சிறுத்தையைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கு கழுகு போல கூர்மையான பார்வை. அதில் சந்தேகமே இல்லை. உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனாலும், சிலர் இந்த படத்தில் சிறுத்தை எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக, சிறுத்தையைக் கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். காய்ந்த சிறு மரங்கள் இடையே கவனமாக உற்றுப் பாருங்கள். சிறுத்தை சிக்கலாம்.
இப்போது எளிதாக சிறுத்தையைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். உங்களுக்கும் வாழ்த்துகள். ஆனால், சிலர் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக சிறுத்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.