Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் வைரலாகும் காலம் இது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. அதன் சுவாரசியங்களில் மயங்காதவர்களே இல்லை.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் திரியும் சிம்பன்சி குரங்கு உடன் மறைந்திருக்கும் பல்லியை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க அதிபுத்திசாலிதான். நீங்கள் ட்ரை பண்ணி பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மனதை மருளச் செய்யும் ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு புதிராக மட்டுமல்லாமல், முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து ஆளுமையை வெளிப்படுத்துவதால் நெட்டிசன்களையும் சமூக ஊடக பயனர்களையும் ஈர்த்து வருகிறது. அதே நேரத்தில் எல்லா ஆப்டிகல் இல்யூஷன் படங்களும் ஆளுமையை வெளிப்படுத்துபவை அல்ல என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் யூடியூபில் வெளியாகி உள்ளது. இந்த படம் பார்க்க எளிமையாக இருக்கலாம். ஆனால், அந்த அளவுக்கு எளிதல்ல. இந்த படத்தில் காட்டில் இரு சிம்பன்சி குரங்கு அலைந்து திரிகிறது. அதே நேரத்தில் இந்த படத்தில் சிம்பன்சி குரங்குடன் ஒரு பல்லி இருக்கிறது. அந்த பல்லி எங்கே இருக்கிறது என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. காட்டில் சிம்பன்சி உடன் பல்லியைக் கண்டுபிடிக்க அதிபுத்திசாலிகளால் மட்டுமே முடியும். அந்த அளவுக்கு மிகவும் சவாலானது இது. நீங்கள் பல்லியைக் கண்டுபிடித்து உங்களை அதிபுத்திசாலி என காட்டுங்கள். தேடிப் பாருங்கள்.
அதற்கு முன்னதாக பல்லியைப் பற்றிய தகவல்களைக் கொஞ்சம் தெரிந்துகொள்வோம்.
1.பெரும்பாலான பல்லிகள் நன்றாக நீந்தும் திறன் கொண்டவை. பல்லியின் திறமைகளை நாம் குறைத்து மதிப்பிடுகிறோமா? என்றால் உலகில் பலருக்கும் தெரியாது. ஆனால், பல்லிகள் உண்மையில் தண்ணீரில் சிறப்பாக நீந்தக் கூடியவை. பச்சை வண்ண பல்லியின் திறன்கள் அபாரமானது. இந்த வகை பல்லிகளால் உண்மையில் தண்ணீரில் நடக்க முடியும். பல்லிகள் ஒரு சூப்பர் ஹீரோக்கள் என்று கூறலாம்.
2.உலகின் மிகப்பெரிய பல்லி 2.6 மீட்டர் நீளம் அளவு கொண்டது. பல்லிகள் ஒரு நிலையான அளவில் மட்டும் இருப்பதில்லை. நாம் அனைவரும் ஏறக்குறைய ஒரே நீளமுள்ள பல்லிகளைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்த உயிரினங்கள் உண்மையில் பல்வேறு அளவுகளில் இருக்கின்றன. உலகின் மிகப்பெரிய பல்லி கொமோடோ டிராகன் ஆகும். இது உண்மையில் 2.6 மீட்டர் நீளம் கொண்டது. இது போன்ற ஒரு பல்லி நம் அறைக்கு வந்துவிடக் கூடாது என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
3.பல்லிகள் பூச்சிகளை உண்டு மகிழ்கின்றன. பல்லிகள் அரை நூற்றாண்டு காலம் வரை வாழக்கூடியவை. எல்லா பல்லிகளும் வாழும் என்று பொருள் இல்லை. ஆனால், சில பல்லிகள் 50 ஆண்டுகள் வரை வாழலாம். நீங்கள் பல்லியாக இருந்தால் அதுவே நல்ல ஆயுட்காலம்.
இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் உள்ள காட்டில் சிம்பன்சி குரங்குடன் பல்லி எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் அதிபுத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உங்களுக்காக ஒரு குறிப்பு தருகிறோம். பல்லியை மரங்களில் தேடிப் பாருங்கள். கண்டுபிடிக்கலாம்.
இப்போது நீங்கள் பல்லியை எளிதாகக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்களுக்கு பாராட்டுகள். இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம். பல்லி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.