Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் புதிர்கள் வேடிக்கையான விளையாட்டு மட்டுமல்ல, IQ டெஸ்ட் ஆகவும் உங்கள் கவனிக்கும் திறனை மேம்படுத்தும் பயிற்சியாகவும் இருக்கிறது. நீங்கள் 90-ஸ் கிட்ஸ் என்றால் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் புதிரை புரிந்துகொள்வது இதில் உள்ள சுவாரசியத்தையும் அனுபவிக்க எளிதாக இருக்கும். நீங்கள் வேர்க்கடலையையை வைத்து ஒத்தையா ரெட்டையா என்று விளையாடி இருக்கிறீர்களா? அது போலத்தான் இந்த டிஜிட்டல் யுக விளையாட்டும் சுவாரசியமாக இருக்கும்.
உங்கள் பார்வைக்கு சவால் விடும் மற்றும் உங்கள் கண் பார்வையின் கூர்மையை சோதனைக்கு உட்படுத்தும் ஒரு நம்பமுடியாத ஆப்டிகல் இல்யூஷன் படத்தால் கவரப்படுவதற்கு தயாராகுங்கள். இந்த குழப்பமான ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இரண்டு குதிரைகள் உள்ளன. ஒவ்வொன்றும் விசித்திரமாக திரும்பி நிற்கின்றன. இதில் உள்ள குதிரையின் தலை எந்த பக்கம் நிற்கும் குதிரையின் உடலுக்கு சொந்தமானது என்று 2 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது.
ஒத்தையா ரெட்டையா என்று மனதில் பட்டதை சொல்லாமல், நன்றாக யூகித்து இந்த குதிரை தலை எந்த பக்கம் நிற்கும் குதிரைக்கு சொந்தமானது என்று கூறி அதற்கான காரணத்தையும் கூறுங்கள். நீங்கள் சரியாக கூறி அதற்கான காரணத்தையும் கூறினால், நிஜமாவே நீங்கள் அதிபுத்திசாலிதான். ஏனென்றால், அதிபுத்திசாலிகளால் மட்டுமே சரியாக கண்டுபிடித்துச் சொல்ல முடியும்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இன்ஸ்டாகிராமில் Opticalillusionss பக்கத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் முதல் பார்வையில், இரண்டு குதிரைகள் புல்வெளியில் அமைதியாக மேய்ந்துகொண்டிருக்கின்றன. இது ஒரு நிலையான காட்சியாகத் தோன்றுகிறது. இருப்பினும், நெருக்கமாகப் பார்த்தால், ஒரு விசித்திரமான அம்சம் வெளிப்படுகிறது - குதிரையின் தலைகளில் ஒன்று மறைந்திருக்கிறது. ஒரு குதிரையின் தலை மட்டுமே தெரிகிறது. இந்த ஒரு தலை இரண்டு குதிரைகளின் உடலுக்கும் சொந்தமானது போல இருக்கிறது. உங்கள் கூர்மையான பார்வையையும் புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்தி இந்த குதிரையின் தலை எந்தப் பக்கும் இருக்கும் குதிரையின் உடலுக்கு சொந்தமானது என்று கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். கண்டுபிடித்தால் நிஜமாவே நீங்கள் அதிபுத்திசாலிதான்.
நீங்கள் உங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்திப் பார்த்தால் மாயை விலகும், குதிரை தலை எந்தப் பக்கம் இருக்கும் குதிரையின் உடலுக்கு சொந்தமானது என்பதை எளிதாகக் கண்டுபிடித்து விடுவீர்கள்.
உண்மையில் இந்த குதிரைத் தலை எந்த குதிரையின் உடலுக்கு சொந்தமானது என்பதை இங்கே உங்களுக்கு விளக்கமாகக் கூறுகிறோம்.
இந்த குதிரைத் தலை வலது பக்கம் இருக்கும் குதிரையின் உடலுக்கு சொந்தமானது. அதாவது 2வது குதிரையின் உடலுக்கு சொந்தமானது. எப்படி என்றால், வலது பக்கம் இருக்கும் குதிரையின் கழுத்தில் இருக்கும் மூடியும் குதிரை தலையில் இருக்கும் முடியும் கருப்பு நிறத்தில் இருக்கிறது. அதனால், இந்த குதிரையின் தலை வலது பக்கம் இருக்கும் குதிரையின் உடலுக்கு சொந்தமானது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.