New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/08/Leopard-1-12.jpg)
Optical illusion challenge. image: twitter/ @trikansh_sharma
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் மறைந்திருக்கும் சிறுத்தையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் சவால் விடப்படுகிறது. அதிபுத்திசாலிகளால் மட்டுமே சாத்தியம்.
Optical illusion challenge. image: twitter/ @trikansh_sharma
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நெட்டிசன்களின் மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு விளையாட்டாகவும் பிரபலமாகி உள்ளது. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் உங்கள் கவனிக்கும் திறனையும் யோசித்து தேடும் திறனையும் மேம்படுத்த உதவும்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் மறைந்திருக்கும் சிறுத்தையை 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கும் சவால் விடப்படுகிறது. சிறுத்தையை அதிபுத்திசாலிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்பதால் நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள். நீங்கள் அதிபுத்திசாலி என்பதைக் காட்டுங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நேற்று இன்று உருவானவை இல்லை. கி.மு. 5000 ஆண்டுகளுக்கு முந்தைய பண்டைய கிரேக்கத்தில் ஆபடிகல் இல்யூஷன் பற்றிய குறிப்புகள் அகழ்வாராய்ச்சிகளில் கிடைக்கின்றன. அதே போல, ரோமிலும் ஆப்டிகல் இல்யூஷன் காட்சிக்கான குறிப்புகள் உள்ளன. கிரேக்க தத்துவஞாணி அரிஸ்டாடில் ஆப்டிகல் இல்யூஷன் காட்சியைப் பற்றி குறிப்பிடுகிறார். இந்தியாவில், பழங்கால கோயில்களில் உள்ள பல சிற்பங்களை நாம் ஆப்டிகல் இல்யூஷன் கோணத்திலும் பார்க்கலாம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் நாம் காணும் காட்சியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி திகைக்க வைக்கின்றன. ஆனால், அது நம் மூளை ஒரு காட்சியை எப்படி புரிந்துகொள்கிறது என்பதை வைத்து தந்திரமாக விளையாடுகிறது. இதனால்தான், ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் ஒரு சுவாரசியமான விளையாட்டாக இருக்கிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படம் ராஜாஜி புலிகள் காப்பக காட்டில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை திரிகன்ஷ் சர்மா (Trikansh Sharma @trikansh_sharma) தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த படத்தில் காட்டில் மறைந்திருக்கும் சிறுத்தையை 5 நொடியில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள்தான் அதிபுத்திசாலி. ஏனென்றால், சிறுத்தையை அதிபுத்திசாலிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். இது கடினமான சவால்.
Spot the Leopard in this frame if you can. #RajajiTigerReserve pic.twitter.com/FlkLDkSjWF
— Trikansh Sharma (@trikansh_sharma) August 1, 2023
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் சிறுத்தையை இந்நேரம் நீங்கள் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நிஜமாகவே நீங்கள் அதிபுத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
சிலர் சிறுத்தை எங்கே இருக்கிறது என அடையாளம் காண முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக சிறுத்தையைக் கண்டுபிடிக்க ஒரு குறிப்பு தருகிறோம். மரங்களின் அருகே கவனமாகப் பாருங்கள். சிறுத்தையை எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.
நீங்கள் இப்போது சிறுத்தையை எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். ஆனாலும் சிலர் இன்னும் சிறுத்தையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறுகிறார்கள். அவர்களுக்காக சிறுத்தை எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு சுவாரசியமான இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. அது உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிற விளையாட்டு. அதனால், தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகியுள்ள ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ஏற்று பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.