Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்கிற மனதை மருளச் செய்து குழப்பமடையச் செய்கிற படங்கள் சமூக ஊடகங்களில் அதிக அளவில் பகிரப்படுகிறது. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம், கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தரக்கூடியது. சில ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் விடையை நீங்கள் தலைகீழாக நின்றாலும் கண்டுபிடிக்க முடியாது. அதனால்தான், இது உங்களுடைய மூளையின் திறனையும் மேம்படுத்தக் கூடியது என்கிறோம்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு முயல் இருக்கிறது. ஆனால், இந்த படத்தில் மறைந்துள்ள குதிரையை 2 நொடிகளுக்குள் அதிபுத்திசாலிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்கள் அதிபுத்திசாலினு நிரூபிக்க ஒரு வாய்ப்பு. குதிரையை 2 நொடிகளில் கண்டுபிடிங்க பார்க்கலாம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதியாகவும் உற்று கவனிக்கும்போது வேறு மாதிரியாகவும் இருப்பதைப் பார்க்கலாம். இந்த படங்கள் உண்மையில் இருப்பதை விட வித்தியாசமாக இருப்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். யதார்த்தத்துடன் பொருந்தாத ஒன்றை உணரும்படி நம்மை ஏமாற்றும் விதமாக இந்த படங்கள் இருக்கின்றன. ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு தோற்ற மயக்கம், நீங்கள் மயங்காமல் பார்க்க வேண்டும். ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு காட்சிப் பிழை, நீங்கள் பிழை இல்லாமல் பார்க்க வேண்டும். ஆப்டிகல் இல்யூஷன் ஒரு பெருங்குழப்பம், அதை நீங்கள் தெளிவாகப் பார்க்க வேண்டும். ஆப்டிகல் இல்யூஷன் ஒரு தந்திரம், அதை நீங்கள் பலே கில்லாடி போல பார்க்க வேண்டும். இது ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல. உங்கள் மூளையின் திறனை மேம்படுத்தவும் உதவும்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் Pinterest தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் ஒரு முயல் இருக்கிறது. ஆனால், இந்த படத்தில் மறைந்துள்ள குதிரையை 2 நொடிகளுக்குள் அதிபுத்திசாலிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்கிறார்கள். நீங்கள் அதிபுத்திசாலினு நிரூபிக்க ஒரு வாய்ப்பு. எப்படியாவது 2 நொடிகளில் குதிரையைக் கண்டுபிடிச்சு அதிபுத்திசாலினு நிரூபியுங்கள்.
உங்களுக்கான நேரம் தொடங்கிவிட்டது. 1… 2… மிக எளிதாக கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நிஜமாகவே நீங்கள் அதிபுத்திசாலிதான்.
ஆனால், சிலர் குதிரை எங்கே இருக்கிறது என்று தேடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்காக ஒரு குறிப்பு தருகிறோம். சில ஆப்டிகல் இல்யூஷன் புதிர்களைத் தலைகீழாக நின்றாலும் கண்டுபிடிக்க முடியாது. இந்த புதிரை நீங்கள் தலைகீழாக நின்று பார்த்தால் கண்டுபிடிக்கலாம். அதைவிட இன்னும் எளிதாக கண்டுபிடிக்க வேண்டும் என்றால், படத்தை தலைகீழாக திருப்பி பாருங்கள் குதிரை கண்ணில் படும்.
நிச்சயமாக இந்த ஆப்டிகல் இல்யூஷன் உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலைதரக்கூடிய ஒரு பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுதான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.