Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் சிங்கம், புலி, சிறுத்தை, கரடி, யானை, பாம்பு கண்டுபிடியுங்கள் என்றாலே நெட்டிசன்கள் உற்சாகமாகமாகி வெறித்தனமாகத் தேடத் தொடங்கிவிடுகிறார்கள். ஆப்டிகல் இல்யூஷன் படங்களின் புதிர் ஒரு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமல்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிப்பவையாக இருக்கிறது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், காட்டில் ஒற்றை யானை மேய்ந்து கொண்டிருக்க, மறைந்திருக்கும் கொடிய விஷப் பாம்பு எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடிச்சா நீங்க அதிபுத்திசாலிதான்.
ஆப்டிகல் இல்யூஷன் புதிர் விளையாட்டுகள் ஏன் சுவாரசியமாக இருக்கிறது என்றால், ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மாயாஜாலம், அது ஒரு தந்திரம், நீங்கள் பார்த்கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு மேஎமேஜிக், ஆனால், நீங்கள் கொஞ்சம் கெட்டிக்காரத் தனமாக யோசித்தால் ஒன்றுமே இல்லை.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ள இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒரு காட்டுப் பகுதியில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் காட்டில் ஒரு ஒற்றை யானை மேய்ந்துகொண்டிருக்கிறது. அதே நேரத்தில் இந்த காட்டில் ஒரு கொடிய விஷப் பாம்பு மறைந்திருக்கிறது. அந்த கொடிய விஷப் பாம்பு எங்கே இருக்கிறது என 5 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது. பலரும் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள். இதனால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் புதிரை நாமும் முயற்சி செய்து பார்த்துவிடலாம் என்று சவாலை ஏற்று பாம்பைத் தேடி வருகின்றனர்.
இந்த படத்தில் பாம்பு இல்யூஷன் செயப்பட்டிருப்பதால் பலரும் பாம்பை கண்டுபிடிக்க முடியாமல், பாம்பு எங்கே இருக்கிறது என்று கேட்டு வருகிறார்கள்.
ஆனால், இந்நேரம் நீங்கள் இந்த படத்தில் இல்யூஷன் செய்யப்பட்டுள்ள பாம்பைக் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். 15 நொடிகளுக்குள் பாம்பைக் கண்டுபிடித்துவிட்டிருந்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நிஜமாவே நீங்கள் அதிபுத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை, உங்களால் பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு உதவி செய்ய ஒரு குறிப்பு தருகிறோம். இந்த படத்தில் மரங்களில் கவனமாகப் பாருங்கள். சல்லடை போட்டு தேடுங்கள் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம். இப்போது படத்தை நன்றாக உற்றுப் பார்த்து கண்டுபிடியுங்கள்.
இன்னும் உங்களால் இந்த படத்தில் மறைந்திருக்கும் பாம்பைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், பரவாயில்லை. உங்களுக்காக பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.