Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தை ஒரு சூறாவளியைப் போல தாக்கி வருகிறது. சூறாவளி என்பதை விட சுனாமி போல தாக்கி வருகிறது. நெட்டிசன்கள் இந்த படத்துல மறைந்திருக்கிற விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்றாலே பரபரப்படைந்து வெறித்தனமாகத் தேடி வருகிறார்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் ஒரு நெட்டிசன்களுக்கு இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டாக மட்டுமில்லாமல் கண்ணுக்கும் மூளைக்கும் நல்ல பயிற்சி அளிப்பவையாகவும் இருக்கிறது. நீங்களும் படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடித்து பயிற்சி செய்யுங்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் டுலிப் பூந்தோட்டத்தில் உலவும் பாம்பை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் அதிபுத்திசாலி. ஏனென்றால், இது மிகவும் சவாலானது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்களில் மறைந்துள்ள விலங்குகளைக் கண்டுபிடிப்பது என்பது வைக்கோல் போரில் ஊசியைத் தொலைத்துவிட்டுத் தேடுகிற கதைதான். இன்னும் சரியாக சொல்வதென்றால் தோள் மேலே ஆட்டுக்குட்டியை வைத்துக்கொண்டு ஊரெல்லாம் தேடுவது போல இருக்கும். ஆனால், கொஞ்சம் ஸ்மார்ட்டாக யோசித்து தேடினால் எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் உள்ள டுலிப் பூந்தோட்டத்தில் ஒரு பாம்பு உலவுகிறது. அந்த பாம்பு சாதாரணமான பார்வைக்கு தெரியாது. ஆனால், பாம்பு எங்கெ இருக்கிறது என்று கூர்மையாகப் பார்த்து தேடினால், கண்டுபிடித்துவிடலாம். அதனால், இந்த படத்தில் டுலிப் பூந்தோட்டத்தில் உலவும் பாம்பை 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள்தான் அதிபுத்திசாலி. ஏனென்றால், இது மிகவும் சவாலானது. நீங்கள் கொஞ்சம் முயற்சி செய்து பாருங்கள்.
டுலிப் (tulip) அல்லது துலிப் என்பது தண்டுக் கிழங்கு கொண்ட நீடித்து நிற்கும் காட்சிப்பூக்களைக் கொண்ட, ஏற்றுக் கொள்ளப்பட்ட கிட்டத்தட்ட 75 காட்டு இனங்களைக் கொண்ட துலிபா வகைத் தாவரமாகும். இது லிலியாசே என்றழைக்கப்படும் அல்லிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இவ்வினம் மேற்கு ஐபீரிய மூவலந்தீவு, வட ஆப்பிரிக்கா, கிரேக்கம், பால்கன், துருக்கி, இலவண்ட்டு (சிரியா, இசுரேல், லெபனான், யோர்தான்), ஈரான் முதல் உக்ரேனின் வடக்கு, தென் சைபீரியா, மெங்கோலியா மற்றும் சீனாவின் கிழக்கு முதல் வடமேற்கு வரையான பிரதேசங்களை தாயகமாகக் கொண்டது.
நீங்கள் இந்த படத்தில் டுலிப் பூந்தோட்டத்தில் உலவும் பாம்பை 7 நொடிகளுக்குள் கண்டுபிடித்துவிட்டிருந்தால், உங்களுக்கு பாராட்டுகள். கண்டுபிடிக்கவில்லை என்றால், பாம்பு எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.