Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் இணையத்தில் நெட்டிசன்களிடம் மாயாஜாலங்களை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. ஒருமுறை ஆப்டிகல் இல்யூஷன் சவாலை ஏற்று விடையைத் தேடிக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால், அதன் சுவாரசியத்தில் மயங்கிப் போய் உங்கள் கவலைகளை மறந்து ஆப்டிகல் இல்யூஷன் சவால்களை ரிலாக்ஸாக தேடிக்கொண்டே இருப்பீர்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் காட்டில் பதுங்கி இருக்கும் புலியை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் அதிபுத்திசாலி.
புலிகள் அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் குறிப்பிடத்தக்க மறைந்துகொள்ளும் திறன்களை வெளிப்படுத்துகின்றன, அவற்றின் தனித்துவமான ரோம வடிவம் அதற்கு ஏற்றார் போல இருக்கிறாது. புலிகள் மிக எளிதாக பதுங்கி மறையும்போது கண்ணுக்குத் தெரியாமல் போகும் திறனை வெளிப்படுத்தும் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி ஆச்சரியப்பட வைத்துள்ளது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் சஞ்ஜய்குமார் ஐ.ஏ.எஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் இருந்து எடுக்கப்பட்டது. இந்த படத்தில் உள்ள காட்டில் ஒரு புலி பதுங்கியிருக்கிறது. அந்த புலி எங்கே பதுங்கி இருக்கிறது என 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கள் அதிபுத்திசாலிதான். ஏனென்றால், அதிபுத்திசாலிகளால் மட்டுமே நுணுக்கமாகப் பார்த்து புலியைக் கண்டுபிடிக்க முடியும். நீங்கள் கொஞ்சம் ட்ரை பண்ணி பாருங்கள்.
நீங்கள் இந்நேரம், இந்த படத்தில் காட்டில் பதுங்கி இருக்கும் புலி எங்கே மறைந்திருக்கிறது என கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இந்த ஆப்டிகல் இல்யூஷன் சவாலில் நீங்கள் அதிபுத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஒருவேளை, உங்களால் இன்னும் புலியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம். புலி எங்கே இருக்கிறது என ஒரு குறிப்பு தருகிறோம். படத்தில் மையப் பகுதியில் கவனமாகப் பாருங்கள்.
இப்போது புலி எங்கே இருக்கிறது என்று எளிதாகக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். இன்னும் அடையாளம் காண முடியவில்லை என்றால், புலி எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.
உங்களுக்காக காட்டில் புலி எப்படி யாருடைய கண்ணுக்கும் தெரியாமல் பதுங்கி இருக்கிறது என்பதை வீடியோவை பகிர்கிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.