Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல, அது லட்சக் கணக்கான நெட்டிசன்களை கவர்ந்து ஈர்க்கும் ராட்சத காந்தம் அதன் சுவாரசியத்தால் ஈர்த்து வருகிறது.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் மறைந்திருக்கும் மூன்று முகங்களை 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் நீங்கதான் அதிபுத்திசாலி.
ஆப்டிகல் இல்யூஷன் பல வகைகளாக இருக்கிறது. இந்த படத்தில் மறைந்திருக்கிற, மனிதர்கள், விலங்குகள், பறவைகளைக் கண்டுபிடியுங்கள் என சவால் விடப்படுகிறது. அதே போல, இந்த படத்தில் உங்களுக்கு முதலில் என்ன தெரிகிறதோ, அதை வைத்து உங்களின் ஆளுமையை குணாதிசயங்களைக் கூறுவது இன்னொரு வகை. இந்த படத்தில் எத்தனை விலங்குகள் இருக்கிறது என்று கண்டுபிடிக்க சவால் விடுவது இன்னொரு வகை இப்படி பல வகையான ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெளியாகி நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Jagranjosh தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் ஒரு டிஜிட்டல் ஓவியம். இந்த படத்தில் ஒரு காதல் ஜோடி படகு சவரி செய்கிறார்கள். ஆண் படகை ஓட்டுகிறான். அருகே பசுமையான மலைகள், குன்றுகள் இருக்கின்றன. அதே நேரத்தில், இந்த படத்தில் மேலும் மூன்று முகம் மறைந்ருக்கின்றன. அந்த மூன்று முகங்களும் எங்கே இருக்கின்றன என 10 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால், ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் அதிபுத்திசாலி.
நீங்கள் இந்நேரம் இந்த படத்தில் மறைந்திருக்கும் மூன்று முகங்களைக் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என நம்புகிறோம். நிஜமாவே நீங்கள் அதிபுத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
ஆனால், சிலர் 2 முகத்தைக் கண்டுபிடித்துவிட்டோம் 3வது முகம் எங்கே இருக்கிறது என்று கேட்கிறார்கள். உங்களுக்காக சில குறிப்புகளைத் தருகிறோம். அந்த மூன்று முகங்களும் மாய முகம், அது மலையாக இருக்கலாம், மேகமாக இருக்கலாம், என்னவாகவும் இருக்கலாம் உன்னிப்பாகப் பார்த்து முகத்தின் தோற்றத்தில் இருப்பவைகளைக் கண்டுபிடியுங்கள்.
நீங்கள் இப்போது மிகவும் எளிதாக 3 முகங்களையும் கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள். உங்களுக்கும் பாராட்டுகள். ஆனாலும், சிலரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்ய இந்த படத்தில் மாயமாக மறைந்திருக்கும் மூன்று முகங்கள் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
ஆப்டிகல் இல்யூஷன் படம் என்பது வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுமட்டுமல்ல ஒரு காட்சியைப் பார்க்கும்போது முழுவிவரத்துடன் பார்க்க உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கிறது. தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.