New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/05/eyes-in-the-forest.jpg)
ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் மறைந்திருக்கும் 13 முகங்களை உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா?
சமீப காலமாக சமூகவலைத்தளங்களில் கண்களை குழப்பம் விதமான ஆப்டிக்கல் இல்யூஷன் இமேஜ்கள் வைரலாக பரவி வருகிறது. ஒரு புகைப்படத்தில் நம் கண்களுக்குத் தெரியும் காட்சி, சிலருக்கு வேறு மாதிரியாகவும், கூர்ந்து கவனித்தால் முற்றிலும் வேறாகவும் தோன்றும்.சில வகை ஆப்டிக்கல் இல்யூஷன் ஓவியங்கள் அதனுள் மறைந்திருக்கும் ரகசியத்தை தேடி கண்டுபிடிக்க உங்களை தூண்டும் புதிர் விளையாட்டு போல் இருக்கும்.
அத்தகைய ஓவியம் ஒன்று சமூகவலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில் மறைந்திருக்கும் முகங்களை கண்டுபிடியுங்கள் என்கிற சவாலை இணையவாசிகள் முன்வைக்கின்றனர்
பெவ் டூலிட்டில் உருவாக்கிய இந்த ஓவியம் , ‘The Forest Has Eyes’ என அழைக்கப்படுகிறது. இதில், பல முகங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளது. ஒருசிலவற்றை எளிதாக கண்டறியலாம். ஆனால், அனைத்தையும் கண்டறிய நீங்கள் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.
இந்த ஓவியத்தை முதலில் சாதாரணமாக பார்த்தால், பாறைகள், மரங்கள் மற்றும் 2 குதிரை சவாரி வீரர்களை கண்டறிய முடியும். அதே சமயம், நீங்கள் உன்னிப்பாக கவனித்தால் பாறைகளில் சிக முகங்களை கண்டறிய முடியும்.பெரும்பாலும் 4 முகங்களை எளிதாக கண்டறிய முடியும்.
ஆனால், உண்மையில் அந்த ஓவியத்தில் 13 முகங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. என்ன 13 முகங்களையும் கண்டுபிடித்துவிட்டீர்களா? இல்லையா? கவலையை விடுங்கள், கீழே பதிலை காணலாம். மரங்கள், பாறைகள், ஆறு செல்லும் வடிவத்தில், முகம் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த போட்டோவை, உங்கள் நண்பர்களுக்கும் அனுப்பு சேலஞ்ச் செய்யுங்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.