Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக இணையத்திலும் சமூக ஊடகங்களிலு அதிக அளவில் வெளியாகி வைரலாகி வருகிறது. நெட்டிசன்களும் லட்சக் கணக்கில் ஆப்டிகல் இல்யூஷன் படங்களை நோக்கி படையெடுத்து வருகிறார்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் ஓவியத்தில் உங்கள் கண்களை ஏமாற்றும் ஒரு வர்ணஜாலம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் எத்தனை குதிரைகள் இருக்கிறது என்பதை 25 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று சவால் விடப்படுகிறது.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு தந்திரம். ஆப்டிகல் இல்யூஷன் என்பது நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தை. உங்கள் மூளையைக் குழப்பும் பெரும் குழப்பம். உங்கள் தலைமுடியைச் பிச்சிக் கொள்ளச் செய்யும் விடை காண முடியாத புதிர். முடிவில் விடை தெரியும்போது உங்களை உற்சாகப்படுத்தி மகிழ்ச்சி அளிக்கும். இந்த அளவுக்கு சுவாரசியமானதுதான் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் ஓவியம் (c) Octavio Ocampo (www.wikiart.org) தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த ஓவியம் இன்ஸ்டாகிராமில் Optical illusions பக்கத்தில் எத்தனை குதிரைகள் உளது என்று கேட்டு கேட்டு வெளியாகி உள்ளது. உங்கள் கண்களை ஏமாற்றி மூளையைக் குழப்பும் வர்ணஜாலம் செய்யும் இந்த ஓவியம் ஆப்டிகல் இல்யூஷன் பொழுதுபோக்கிற்காக எந்த லாப நோக்கமும் இல்லாமல் பயன்படுத்தப்படுகிறது. இந்த படத்தில் மொத்தம் எத்தனை குதிரைகள் இருக்கிறது என்று 25 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா நீங்க நிஜமாவே ஜீனியஸ். கொஞ்ச ட்ரை பண்ணி பாருங்கள்.
மரங்கள், செடிகள், புதர்கள் என பசுமையாக இருக்கும் இந்த படத்தில், ஒரு ஸ்னைப்பர் மறைந்திருக்கிறார். அதாவது ஒரு துப்பாக்கிச் சுடும் வீரர் மறைந்திருக்கிறார். அவரைக் கண்டுபிடிக்க முடியுமா என்பதுதான் சவால். ஸ்னைப்பரைக் கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்க செம ஷார்ப் பாஸ்.
நீங்கள் இந்நேரம் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் எத்தனை குதிரைகள் இருக்கிறது என்று கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷன் சவால்களைத் தீர்ப்பதில் நீங்கள் நிஜமாவே ஜீனியஸ்தான். உங்களுக்கு பாராட்டுகள்.
சிலர் இந்த படத்தில் 18 குதிரைகள் இருக்கிறது என்கிறார்கள். சிலர் 19 குதிரைகள் இருக்கிறது என்கிறார்கள். சிலர் 20 குதிரைகள் இருக்கிறது என்கிறார்கள். சிலர் 24 குதிரைகள் இருக்கிறது என்கிறார்கள்.
ஆளுக்கு ஒரு எண்ணிக்கையைக் கூறினாலும் உண்மையில் எத்தனை குதிரைகள் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறீர்களா? உங்களுக்காக இந்த படத்தில் விடை தருகிறோம். இந்த படத்தில் 24 குதிரைகள் இருக்கிறது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.