New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/04/4-apples-1-2025-07-04-08-23-15.jpg)
இலைகளுக்கு இடையே மறைந்திருக்கும் 4 ஆப்பிள்களை 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Photograph: (Image credit: Dudolf)
Optical illusion: இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இலைகளுக்கு இடையே மறைந்திருக்கும் 4 ஆப்பிள்களை 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது; கண்டுபிடித்தால், நீங்கள் எவ்ளோ ஷார்ப்னு தெரிந்துகொள்ளலாம்.
இலைகளுக்கு இடையே மறைந்திருக்கும் 4 ஆப்பிள்களை 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? Photograph: (Image credit: Dudolf)
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமீப காலமாக இணையத்திலும் சமூக ஊடகங்களில் சுனாமி போல பாய்ந்து வருகிறது. நெட்டிசன்கள் ஆப்டிகல் இல்யூஷன் சவால்களில் திக்குமுக்காடி திணறிப் போகிறார்கள். விடை கண்டுபிடிக்கும்போது அளவில்லாத உற்சாகம் அடைகிறார்கள்.
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் இலைகளுக்கு இடையே மறைந்திருக்கும் 4 ஆப்பிள்களை 15 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது; கண்டுபிடித்தால், நீங்கள் எவ்ளோ ஷார்ப்னு தெரிந்துகொள்ளலாம். ட்ரை பண்ணி பாருங்க.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் விடுக்கும் சவால்கள் முதலில் பார்ப்பதற்கு எளிமையாக இருக்கும், விடை கண்டுபிடிக்க தேடத் தொடங்கினால், குழப்பத்தில் சிக்கிக் கொள்வீர்கள், நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்கள் கண்களை ஏமாற்றும், உங்கள் மூளையைக் குழப்பி முழியைப் பிதுக்கும், விடையைக் கண்டுபிடித்தால் உற்சாகம் கரைபுரளும். நீங்கள் வேண்டுமானால், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தின் சவாலை எதிர்கொண்டு பாருங்கள். ஆச்சரியத்திலும் சுவாரசியத்திலும் வியந்து போவீர்கள்.
இந்த படம் ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வரைவதில் பிரபலமான ஹங்கேரி நாட்டு ஓவியர் ஜெர்ஜ்லி டுடாஸ் டுடால்ஃப் வரைந்தது. இந்த படத்தை லாப நோக்கம் இல்லாமல் பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துகிறோம். இது ஒரு டிஜிட்டல் ஓவியம். இந்த படத்தில் இலையுதிர் காலத்தில் உதிரும் இலைகளுக்கு இடையே மறைந்திருக்கும் 4 ஆப்பிள்களை கண்டுபிடிக்க முடியுமா என உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால் விடப்படுகிறது; கண்டுபிடித்தால், நீங்கள் எவ்ளோ ஷார்ப்னு தெரிந்துகொள்ளலாம். ட்ரை பண்ணி பாருங்க.
நீங்கள் இந்நேரம் 4 ஆப்பிள்களையும் கண்டுபிடித்து விட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். நீங்கள் எவ்ளோ ஷார்ப்னா செம ஷார்ப் தலைவா, உங்களுக்கு பாரட்டுகள். வாழ்த்துகள்.
ஒருவேளை உங்களால் 15 நொடிகளுக்குள் 4 ஆப்பிள்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்பட வேண்டாம், இன்னும் கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டு படத்தை ஜூம் செய்து நிதானமாகத் தேடிப் பாருங்கள்.
இன்னும் உங்களால் 4 ஆப்பிள்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம், உங்களுக்காக இங்கே விடை தருகிறோம்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.