New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/17/RbIR1sQSr4ZMcUXntfOM.jpg)
ஜாலியாக விளையாடும் சிறார்கள்... அந்த இடத்தில் ஒரு 'மெழுகுவர்த்தி' ஒளிந்து இருக்கு!
இன்றைய காட்சி மாயை சவாலில், சறுக்கு விளையாடும் சிறார்கள் உள்ள புகைப்படத்தில் 'மெழுகுவர்த்தி' மறைந்து இருக்கிறது. 5 விநாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே சவால். முடிந்தால் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.
ஜாலியாக விளையாடும் சிறார்கள்... அந்த இடத்தில் ஒரு 'மெழுகுவர்த்தி' ஒளிந்து இருக்கு!
Optical Illusion Test: ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு இணையப் பொழுதுபோக்கு விளையாட்டு மட்டுமல்ல, அது லட்சக் கணக்கான நெட்டிசன்களை கவர்ந்து ஈர்க்கும் ராட்சத காந்தம் அதன் சுவாரசியத்தால் ஈர்த்து வருகிறது. ஆப்டிகல் இல்யூஷன் விளையாட்டுகள்தான் இன்றைய தேதியில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சமூக ஊடகங்கள், செய்தி வலைதளங்கள், காணொளிகள் என்று எந்தப் பக்கம் திரும்பினாலும் இந்தப் புதிர்களை நாம் நிறைய பார்க்க முடிகிறது.
இதன் தொடக்கம் என்னவாக இருக்கும் என்று சிந்தித்து பார்த்தால் பத்திரிகைகளில் வெளியான புதிர்கள்தான் என்பதை நாம் தெளிவாக அறிந்துகொள்ளலாம். ஏனெனில், முன்னர் காலத்தில் பத்திரிகைகள், செய்தித் தாள்கள் தான் பொழுதுபோக்காக மக்களுக்கு இருந்தது. ஆனால், இன்றைய சூழலில் அனைவரது கரங்களிலும் ஸ்மார்ட்போன் இருக்கின்றன. இதுவே மக்களுக்கு பெரும் பொழுதுபோக்காக மாறி இருக்கிறது. அதன் பரினாம வளர்ச்சியாக தான் ஆப்டிகல் இல்யூஷன் உருமாறி இருக்கிறது.
இந்த ஆப்டிகல் இல்யூஷனை விளையாடுவதன் மூலம் நம்முடைய பார்வைத் திறன் கூர்மையாவது மட்டுமின்றி, மூளையின் செயல்பாடுகளும் சுறுசுறுப்பாக இருக்கும். இவை நம்முடைய அறிவு வளர்ச்சியை புரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாகவும் சில சமயங்களில் அமைகிறது.
அதன்படி இன்றைய காட்சி மாயை சவாலில், சறுக்கு விளையாடும் சிறார்கள் உள்ள புகைப்படத்தில் 'மெழுகுவர்த்தி' மறைந்து இருக்கிறது. 5 விநாடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே சவால்.
இந்த காட்சி மாயை முகநூலில் பமீலா பேடலாஸ் நபலன் என்ற பயனரால் பகிரப்பட்டது. முதல் பார்வையில், இந்தப் படம் ஒரு மகிழ்ச்சியான பூங்கா காட்சியைத் தவிர வேறொன்றுமில்லை என்று தோன்றுகிறது. பொன்னிற கூந்தல் கொண்ட சிறுமி சறுக்கு விளையாட்டு பலகையில் சறுக்கிச் செல்கிறாள். ஒரு சிறுவன் கூடைப்பந்துடன் அருகில் நிற்கிறான். பூக்கும் செர்ரி மரங்கள், வெள்ளை மரத்தாலான வேலி மற்றும் பின்னணியில் பல கட்டிடங்கள் சூழலை வடிவமைக்கின்றன. ஒரு அமைதியான சூழ்நிலையை உருவாக்குகிறது. இந்த படத்திற்குள் சிறிய மெழுகுவர்த்தி புத்திசாலித்தனமாக மறைக்கப்பட்டுள்ளது. மேலும் 5 வினாடிகளில் மறைந்திருக்கும் மெழுகுவர்த்தியை நீங்கள் கண்டால் உங்கள் மூளை மிகவும் கூர்மையானது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.