சோபாவுக்கு மேல் மிதக்கும் பூனையின் படம் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி, மக்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது. இந்த படத்தைப் பார்ப்பவர்கள் சோபாவுக்கு மேல் மிதக்கும் பூனை உண்மையா என்று ஆச்சரியப்படுகிறார்கள்.
முதல் பார்வையில் வேறொன்றாகவும் உற்று கவனிக்கும்போது வேறொன்றாகவும் தோற்றமளிக்கும் இந்த ஆப்டிகல் இலுசியன் படங்கள் சமூக ஊடகங்களில் லட்சக் கணக்கானோரை ஈர்த்து வைரலாகி வருகின்றன.
Advertisment
சோபாவுக்கு மேல் மிதக்கும் பூனையின் படம் இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி, மக்களை ஆச்சரியப்படுத்தி வருகிறது. இந்த படத்தைப் பார்ப்பவர்கள் சோபாவுக்கு மேல் மிதக்கும் பூனை உண்மையா என்று ஆச்சரியப்படுகிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமை ரெடிட்டில் வெளியான, சோபாவுக்கு மேல் மிதக்கும் பூனை படம் பார்ப்பவர்களை குழப்பமடையச் செய்கிறது. இந்த படம், சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்த ஆப்டிகல் இலுசியன் படத்தில், ஒரு சோபாவில் படுத்திருக்கும் பூனையின் படம், அது மிதப்பது போல இருக்கிறாது. அருகில் ஒரு நிழலும் மிதக்கும் பூனையின் படமும் உள்ளது.
சோபாவுக்கு மேல் மிதக்கும் பூனை படதைப் பார்ப்பவர்கள், சோபாவில் தெரியும் நிழல் இந்த பூனையின் நிழல் அல்ல சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
சிலர் இந்த படத்தை போட்டோஷாப் செய்யப்பட்டது என்றும் நிழலை மூடிக்கொண்டு பாருங்கள் இந்த படத்தின் உண்மைத் தன்மை தெரியும் என்று கூறிவருகின்றனர்.
சிலர், பூனை மந்திரத் தன்மை வாய்ந்தது, அது சோபாவுக்கு மேல் மிதக்கலாம் என்றும் கூறிவருகின்றனர். ஆனால், சிலர் அறிவியல் பூர்வமாக எந்த பூனையும் அப்படி மிதக்க முடியாது. இது சித்தரிக்கப்பட்டது என்று கூறிவருகின்றனர். யார் என்ன சொன்னாலும், ஆப்டிகல் இலுசியன் படமான சோபாவுக்கு மேல் பூனையின் படத்தை நீங்கள் நம்புகிறீர்களா என்பதுதான் கேள்வி.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"