பார்ப்பவர்களின் மனதை மருளச் செய்து குழப்பத்தையும் ஆச்சரியத்தையும் ஒரே நேரத்தில் ஏற்படுத்தக் கூடியவை ஆப்டிகல் இலுசியன் படங்கள். அந்த வரிசையில் உங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை கொடுக்கும் விதமாக இந்த ஆப்டிகல் இலுசியன் படத்தில், பாறைகளில் மறைந்துள்ள பெண்ணின் உருவத்தைக் கண்டுபிடியுங்கள் பார்ப்போம் என்று சவால் விடுகிறது.
சமீப காலமாக சமூக ஊடகங்களில் ஆப்டிகல் இலுசியன் படங்கள் அதிக அளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகின்றன. இந்த ஆப்டிகல் இலுசியன் படங்களில், மறைந்திருக்கும் யானையைக் கண்டுபிடியுங்கள், கரடியைக் கண்டுபிடியுங்கள் என்று பல வகையான படங்கள் உள்ளன. சில ஆப்டிகல் இலுசியன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் உற்று கவனிக்கும்போது வேறு மாதிரியாகவும் தெரிகின்றன. இந்த வகையான படங்கள், முதல் பார்வையில் என்ன தெரிகிறதோ அதை வைத்து பார்ப்பவரின் ஆளுமையைக் குறிப்பிட்டு வருகின்றனர்.
இதனால், இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் பகிரப்படும் ஆப்டிகல் இலுசியன் படங்களைப் பார்த்து தங்களின் ஆளுமையை சரிபார்த்துக்கொள்ள பலரும் இந்த படங்களைப் பார்த்து பகிர்ந்து வருகின்றனர்.

இந்த ஆப்டிகல் இலுசியன் படம் பாறைகள் நிறைந்து காணப்படுகிறது. இந்த படத்தைப் பார்க்கும் நீங்கள்இதில் என்ன இருக்கிறது என்று கேட்கலாம். இந்த பாறைகளில் ஒரு பெண்ணின் உருவம் இருக்கிறது. முடிந்தால் அதை கண்டுபிடியுங்கள் என்பதே உங்களுக்கான சவால்.
முதலில் 2016 இல் சமூக ஊடகத் தளமான Imgur இல் வெளியிடப்பட்ட இந்த படம், பாறைகள் நிறைந்திருப்பதைக் காட்டுகிறது. மேலும், ஒரு இளம் பெண் சுற்றுலாப் பயணி ஊதா நிற ஹூடி அணிந்து கேமராவை நோக்கி கை அசைக்கிறார். அதை இந்த பாறை குவியல்களுக்கு இடையே, உங்களால் முடிந்தால் கண்டுபிடியுங்கள். ஆனால், கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல என்று பலரும் தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்கின்றனர்.
பாறை குவியல்களுக்கு இடையே, பெண்ணின் உருவத்தை கண்டுபிடித்துவிட்டால், நிஜமாகவே உங்களுக்கு பாராட்டுகள். ஆனால், கண்டுபிக்க முடியவில்லை என்றால், இதோ உங்களுக்காக அந்த பெண் உருவம் எங்கே இருக்கிறது என்று வட்டமிட்டு காட்டுகிறோம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“