சமூக ஊடகங்களில் மனதை மருளச் செய்து ஒரே நேரத்தில் குழப்பத்தையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் ஆப்டிகல் இலுசியன் படங்கள் வைரலாகும் காலம் இது. ஆப்டிகல் இலுசியன் படங்கள் கண்ணுக்கும் மூளைக்கும் வேலை கொடுக்கும் பொழுதுபோக்கு புதிர்களாக இருக்கின்றன. இந்த ஆப்டிகல் இலுசியன் படத்தில், முதல் பார்வையில் பார்ப்பதற்கு வெறும் கோடுகள் மட்டுமே தெரிந்தாலும் இந்த கோடுகளில் 8 விலங்குகளின் உருவங்கள் இருக்கிறது. அந்த 8 விலங்குகள் என்னென்ன விலங்குகள் என்று கூறுங்கள் பார்க்கலாம்.
ஆப்டிகல் இலுசியன் படங்கள் முதல் பார்வையில், ஒரு மாதிரியாகவும் உற்று கவனிக்கும்போது வேறு மாதிரியாகவும் தெரிகின்றன. இந்த வகையான படங்களை ஒரு கவர்ச்சிகரமான புதிர் விளையாட்டுகளாக இணையங்களில் சமூக ஊடகங்களில் உலாவுபவர்கள் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர்.
இந்த ஆப்டிகல் இலுசியன் படம், பார்ப்பதற்கு ஜிலேபியை பிச்சி போட்ட மாதிரி சிக்கலான கோடுகளால் ஆனது போல இருக்கலாம். ஆனால், இந்த கோடுகளில் 8 விலங்குகளின் உருவம் இருகிறது. இது அவ்வளவு கடினமானது இல்லை என்றாலும் முயன்றால் எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.
இந்த குழப்பமான சுவாரஸ்யமான ஆப்டிகல் இலுசியன் படம், நன்கு கவனித்தீர்கள் என்றால் ஒரு வனச் சூழ்நிலையைக் காட்டுவதாக இருக்கும். இந்த படத்தை நீங்கள் முதன்முறையாகப் பார்க்கும்போது, பல கிளைகள் அல்லது மரங்களைக் கொண்ட கருப்பு வெள்ளை படத்தை மட்டுமே நீங்கள் பார்ப்பீர்கள். ஆனால், இதில் சிங்கம், புலி, யானை உள்ளிட்ட 8 விலங்குகள் உள்ளன என்பதை நீங்கள் விரைவில் கண்டுபிடிப்பீர்கள்.

உங்களால் இந்த படத்தில் 8 விலங்குகளையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் உங்களுக்கு உதவி செய்ய இதோ சில க்ளுவை தருகிறோம். இந்த படத்தை நன்றாக கவனிதால், இடது பக்கத்தில் மூன்று விலங்குகள் இருக்கின்றன. இரண்டு விலங்குகள் நடுவில் உள்ளன, மூன்று விலங்குகள் வலது பக்கத்தில் உள்ளன. இப்போது 8 விலங்குகளையும் கண்டுபிடித்துவிட்டீர்களா?

இந்த ஆப்டிகல் இலுசியன் படம் 1872 ஆம் ஆண்டு அமெரிக்க அச்சு நிறுவனமான க்யூரியர் மற்றும் இவ்ஸ் உருவாக்கியது. இந்த படத்தை வெளியிட்டதில் இருந்து, ஆப்டிகல் இலுசியன் பிரியர்கள் 8 விலங்குகளையும் கண்டுபிடிக்க முடியாமல் குழப்பமடைந்து வருகின்றனர். இப்போது இந்த படம் கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்குப் பிறகு, புதிய பார்வையாளர்களுக்கு சவால் விடும் வகையில் தி புதிர்டு ஃபாக்ஸ் மீண்டும் வெளியிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“