இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரலாகி வரும் ஆப்டிக்கல் இலுசியன் என்கிற மனதை மருளச் செய்கிற படங்கள் அதிகம் பகிரப்பட்டு பார்வையாளர்களை ஈர்த்து வைரலாகி வருகின்றன.
ஆப்டிகல் இலுசியன் பெரும்பாளும் மூளைக்கும் கண்ணுக்கும் வேலை கொடுக்கிற ஒரு புதிர் பொழுதுபோக்காக உள்ளது. அப்படி இந்த படத்தில் மறைந்திருக்கும் விலங்குகளைக் கண்டுபிடியுங்கள் என்று குறிப்பிட்டு பல படங்கள் வெளியாகின்றன. அந்த வரிசையில் மிகவும் சவாலான ஒரு ஆப்டிகல் இலுசியன் படம் வெளியாகி பலருடைய மூளைக்கும் கண்ணுக்கும் வேலை கொடுத்திருக்கிறது. அந்த படம், ஒரு காட்டில் தனியாக இருக்கும் வீடு, அங்கே மறைந்திருக்கும் கரடியைக் கண்டுபிடியுங்கள் என்பதே அந்த சவாலான படம்.
நீங்கள் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள், ஆனால், இந்த படத்தில் மறைந்திருக்கும் கரடியைக் கண்டுபிடியுங்கள். உண்மையில், பலரும் கரடியை கண்டுபிடிக்க முடியாமல் தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்கின்றனர்.
இந்த ஆப்டிகல் இலுசியன் படத்தில் மறைந்திருக்கும் கரடியைக் கண்டுபிடித்திவிட்டீர்கள் என்றால் நிஜமாகவே உங்களுக்கு பாராட்டுகள். எவ்வளவு முயன்றும் உங்களால் கரடியைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை என்றால், உங்களுக்கு நாங்கள் உதவி செய்கிறோம். படத்தில் உள்ள வீட்டுக்கு மேலே இருக்கிறது. இந்த க்ளுவை வைத்துக்கொண்டு இப்போதாவது கரடியைக் கண்டுபிடியுங்கள்.
இப்போது உங்களால் இந்த படத்தில் கரடியைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், வீட்டுக்கு மேலே சிறு கிளைகளுக்கு இடையே கரடி பொம்மை கோடு தெரிகிறது பாருங்கள்.
பலரும் இந்த ஆப்டிகல் இலுசியன் படத்தில் மறைந்திருக்கும் கரடியைத் தேடி கண்டுபிடிக்காமல் தங்கள் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஒரு ட்விட்டர் பயனர் கூறுகையில், “நான் உண்மையான கரடியைத் தேடிக்கொண்டிருந்தேன்.” என்று கூறினார்.
“படத்தில் கிளைகளும் கரடியின் உருவமும் ஒரே மாதிரியாக இருக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லை” என்று மற்றொருவர் ட்விட்டர் பயனர் தெரிவித்தார்.

இப்போது உங்களுக்காக இந்த படத்தில் கரடி சரியாக எங்கே மறைந்திருக்கிறது என்பதை வட்டமிட்டு காட்டுகிறோம். பாருங்கள், கரடி எந்த அளவுக்கு கண்ணுக்கு தெரியாமல் மறைந்திருக்கிறது பாருங்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“