இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீங்கள் முதலில் என்ன பார்க்கிறீர்களோ அது நீங்கள் மற்றவர்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. என்ன நம்ப முடியவில்லையா சோதனை செய்து பாருங்கள் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படம் ஆளுமை சோதனையை அடிப்படையாகக் கொண்டது. இந்த படத்தில் சில நொடிகளில் நீங்கள் முதலில் என்ன பார்க்கிறீர்களோ அது உங்கள் ஆளுமையையும் நீங்கள் மற்றவர்களை எப்படி நடத்துகிறீர்கள் என்பதைப் கூறுகிறது. அதனால், படத்தை கவனமாகப் பாருங்கள் முதல் பார்வையில் நீங்கள் என்ன பார்த்தீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

டிக்டாக் நட்சத்திரம் சார்லஸ் மெரியட் இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தைப் பகிர்ந்துள்ளார். அவர் அடிக்கடி ஆப்டிகல் இல்யூஷன் மற்றும் ஆளுமை சோதனைப் படங்கள் மற்றும் வீடியோக்கலை பகிர்ந்து கொள்கிறார். இந்த படத்தைக் கவனமாகப் பாருங்கள் முதலில் நீங்கள் பார்ப்பதை வைத்து உங்கள் ஆளுமையையும் மற்றவர்களை எப்படி நினைக்கிறீர்கள் என்பதை விமர்சியுங்கள்.
நிபுணர்களின் கருத்துப்படி, இந்த ஆப்டிகல் இல்யூஷன் அடிப்படையிலான ஆளுமை சோதனை. நம்மைப் பற்றி நமக்குத் தெரியும் என்று நாம் நினைத்த அனைத்தையும் மறுபரிசீலனை செய்ய வைக்கும்.
முதலில் பெண்ணைப் பார்த்தால்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் நீங்கள் முதலில் ஒரு பெண்ணைப் பார்த்தால், உங்களுக்கு அன்பான மற்றும் அக்கறையுள்ள இதயம் இருக்கிறது என்று அர்த்தம். உங்கள் வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் மற்றவர்களைப் பற்றி நீங்கள் தொடர்ந்து சிந்திக்கிறீர்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றி நீங்கள் அக்கறை கொண்டு, அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களுடன் நேரத்தைச் செலவிடுவீர்கள்.
முதலில் முகத்தைப் பார்த்தால்
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் முதலில் நீங்கள் ஒரு அழகான முகத்தைப் பார்த்தால், நீங்கள் சுதந்திரமானவர், உணர்ச்சிவசப்படுபவர் மற்றும் திறமையானவர் என்று அர்த்தம். நீங்கள் கடின உழைப்பாளி. உங்கள் கடின உழைப்பு பேசுகிறது. நீங்கள் விரைவில் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருக்கப் போகிறீர்கள். நீங்கள் உணர்ச்சிவசப்படுவதால், நேரத்தை வீணாக்காதீர்கள். வேலை-வாழ்க்கை சமநிலை பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். உங்கள் வேலை வாழ்க்கை இரண்டையும் பிரிக்க முடியாது.
ஆனால், பலரும் மாறுபட்ட பார்வைகளைக் கூறி வருகின்றனர். ஒருவர் தான் முதலில் ஒரு மரத்தையும் முகத்தையும் பார்த்ததாகவும், மற்றொருவர் பெண்ணையும் மரத்தையும் பார்த்ததாகவும் கூறுகிறார்கள். ஆனாலும், இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம், சரியாக கூறுகிறது என்று பதிவிட்டு வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“