/tamil-ie/media/media_files/uploads/2023/07/Tigers-1-5.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் சவால்
Optical illusion game: ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒவ்வொரு நாளும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஈர்த்து வைரலாகி வருகின்றன. ஆப்டிகல் இல்யூஷன் பட புதிர்கள் அவர்களின் விளையாடும் ஆர்வத்தை அதிகரிக்கின்றன. நீங்களும் ஒருமுறை விளையாடிப் பாருங்கள் பிறகு விளையாடிக் கொண்டே இருப்பீர்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Tigers-1-5-1.jpg)
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில், எத்தனை புலிகள் இருக்கின்றன என 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான கவனிக்கும் திறனுக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடிச்சா ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் புத்திசாலி.
பொதுவாக பெரும்பாலான மனிதர்கள் ஒரு காட்சியைப் பார்க்கும்போது அதன் முழு விவரத்தையும் அறிந்துகொள்வதில்லை. அவர்கள் எதை எதிர்பார்த்து நோக்கிப் பார்க்கிறார்களோ அதைமட்டுமே அறிகிறார்கள். மற்ற விவரங்களை அவர்கள் கவனிப்பதில்லை. ஆனால், புத்திசாலிகள், ஜீனியஸ்கள் பிற விவரங்களையும் கூர்மையாக கவனிக்கிறார்கள். இது ஏதோ பிறவியிலேயே வந்த சிறப்பு திறன் என்பதெல்லாம் கிடையாது. எல்லாமே பயிற்சிதான். நீங்களும் அப்படி ஒரு காட்சியில் உள்ள முழு விவரங்களையும் அறிந்து பார்க்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? அப்படி என்றால் பயிற்சி செய்யுங்கள். அதற்கு ஆப்டிகல் இல்யூஷன் படப் புதிர்கள் உங்களுக்கு உதவும்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Tigers-1-5-2.jpg)
இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம் Fresherslive தளத்தில் வெளியாகி உள்ளது. இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் ஒரு காட்டில் உள்ள பாறையின் மீது 2 புலிகள் அமர்ந்திருக்கிறது. ஆனால், இந்த படத்தில் இந்த 2 புலிகள் மட்டும் இல்லை. மேலும் சில புலிகளும் மறைந்திருக்கிறது. ஆனால், அந்த புலிகள் எங்கே இருக்கிறது என்று சாதாரணமாக மேலோட்டமாகப் பார்த்தால் தெரியாது. அதனால், இந்த படத்தில் மொத்தம் எத்தனை புலிகள் இருக்கிறது என்று 7 நொடிகளில் கண்டுபிடிக்க முடியுமா என்று உங்கள் கூர்மையான கவனிக்கும் திறனுக்கு சவால் விடப்படுகிறது. அப்படி கண்டுபிடித்தால் ஆப்டிகல் இல்யூஷனில் நீங்கதான் புத்திசாலி. ஏனென்றால், மறைந்திருக்கும் புலிகளை புத்திசாலிகளால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். நீங்கள் புத்திசாலி என்று காட்டுவதற்கான நேரம் இது. ட்ரை பண்ணி பாருங்கள்.
நீங்கள் இந்நேரம் இந்தப் படத்தில் எத்தனை புலிகள் இருக்கிறது என கண்டுபிடித்துவிட்டிருப்பீர்கள் என்று நம்புகிறோம். ஆப்டிகல் இல்யூஷனில் விடை கண்டுபிடிப்பதில் நீங்கள் நிஜமாவே புத்திசாலிதான். உங்களுக்கு பாராட்டுகள்.
சிலர் இந்த படத்தில் 3 புலிகள் இருக்கிறது என்கிறார்கள். சிலர் 4 புலிகள் இருக்கிறது என்கிறார்கள். உங்களுக்கு எத்தனை புலிகள் தெரிந்தது என்று சொல்லுங்கள். நீங்கள் கண்டுபிடித்த புலிகளின் எண்ணிக்கை சரியானதா என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறீர்களா?
அவசரப்படாதீர்கள், இந்த படத்தில் மொத்தம் 4 புலிகள் இருக்கிறது. அந்த 4 புலிகளும் எங்கே இருக்கிறது என வட்டமிட்டுக் காட்டுகிறோம் பாருங்கள்.
/tamil-ie/media/media_files/uploads/2023/07/Tigers-2-5.jpg)
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் வெறுமனே இணையப் பொழுதுபோக்கு புதிர் விளையாட்டுகளாக மட்டுமில்லாமல், கண்ணுக்கும் மூளைக்கும் பயிற்சி அளிக்கும் விளையாட்டுகளாக இருப்பதால் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தில் நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.